second review completed

எயில்தனை அழித்தல்

From Tamil Wiki
Revision as of 05:46, 18 March 2025 by Jayashree (talk | contribs)

எயில்தனை அழித்தல் நொச்சித்திணையின் துறைகளில் ஒன்று. கோட்டையைக் காவல் காத்த நொச்சி மறவனை அழித்ததைக் கூறும் துறை. எயில்(மதில்) என்பது மதிலில் காவலில் ஈடுபட்டிருந்த மறவனுக்கு இடவாகு பெயராக ஆகிவந்தது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அழகிய மதிலிடத்து உள்ளவனும், துணிவு உடையவனும், கழலினைக் காலில் அணிந்தவனும் ஆகிய நொச்சி மறவன் அழிந்து பட்டதை உரைப்பது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 துணிவுடைய தொடுகழலான்
அணிபுரிசை அழி உரைத்தன்று(கொளு 5.7)

வெண்பா

அகத்தன வார்கழல் நோற்றாள் அரணின்
புறத்தன பேரெழில் திண்தோள் - உறத்தழீஇத்
தோட்குரிமை பெற்ற துணை வளையார் பாராட்ட
வாள் குரிசசில் வானுகினான் (92)

பொருள்: தாள்கள் (கால்கள்) அரணின் அகத்தேயும் தோள்கள் அரணின் புறத்தேயும் வீழ, வாட்படை மறவன் வானமகளிர் கொண்டாடித் தழுவ, இறந்துபட்டான் (வீர மரணம் அடைந்தவரை வானவர் கொண்டாடுவர் என்பது நம்பிக்கை).

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.