பிரம்மவாதின்
பிரம்மவாதின் (1895 - 1914) சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில பத்திரிக்கை. சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் பொருட்டு அளசிங்கப் பெருமாளால் தொடங்கப்பட்டது.
இதழ் தொடக்கம்
பிரம்மவாதின் இதழ் சுவாமி விவேகானந்தரின் மாணவர் அளசிங்கப் பெருமாளின் ஆசிரியவத்துவத்தில் செப்டெம்பர் 1895 ல் தொடங்கப்பட்டது. இதன் முதல் இதழ் செப்டெம்பர் 15, 1895 அன்று வெளிவந்தது. விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் பொருட்டு அளசிங்கப் பெருமாள், டாக்டர் எம்.சி. நஞ்சுண்ட ராவ், வேங்கடரங்க ராவ் ஆகியோருடன் இணைந்து தொடங்கினார். விவேகானந்தர் ஜனவரி 1895ல் அளசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கடிதத்தில் இதழ் தொடங்கும் படி கடுமையாக கேட்டுக் கொண்டதன் பெயரில் இவ்விதழ் தொடங்கப்பட்டது.[1]
பிரம்மவாதின் முதல் இதழில் விவேகானந்தர் ‘சன்னியாசி கீதம்’ என்ற தலைப்பில் பாடலொன்றை எழுதியுள்ளார்.
பிரம்மவாதின் இதழ் சென்னை போபம்ஸ் பிராட்வேயில் (Popham's Broadway)[2] அமைந்த பிரம்மவாதின் அச்சகத்தில் வெளியிடப்பட்டது. இவ்விதழ் ஆங்கில இதழாக வெளிவந்தது. சி.ஜி. நரசிம்மாச்சார், ஆர்.ஏ. கிருஷ்ணம்மாச்சார், ஜி. வேங்கடரங்க ராவ் இதழ் வெளிவர உதவி செய்தனர்.
நோக்கம்
உள்ளடக்கம்
சங்கரர், ராமானுஜர், சதாசிவ பரம்மேந்திரர், பதஞ்ஜலி ஆகியோரின் நூல்களின் மொழிபெயர்ப்பு. இந்து மதம் பற்றிய கட்டுரைகள். காண்ட் முதலான மேலை தத்துவ அறிஞர்களின் கட்டுரைகள். ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்கள், தர்மபாலர், மாக்ஸ் முல்லர் ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சுவாமி விவேகானந்தர் பிரம்மவாதினின் முதல் இதழ் தொடங்கி தொடர்ந்து இதழுக்காக கட்டுரைகள் எழுதியுள்ளார். பி.ஆர். ராஜம் ஐயர் 'மனிதனின் சிறுமையும் பெருமையும்' (Man his littleness and greatness) என்ற தனது முதல் கட்டுரையை பிரம்மவாதினில் எழுதினார்.
தொகுப்பு
சுவாமி விவேகானந்தர் பிரம்மவாதின் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையின் தொகுதி “”
- ↑ ஜனவரி 12, 1895 அன்று சுவாமி விவேகானந்தர் அளசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கடிதம்: “இப்போது அறுதி முடிவாக ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்: பெயரையோ, புகழையோ, அவைபோன்ற வேறெந்த புரட்டையோ நான் பொருட்படுத்துவதில்லை. உலக நன்மைக்காக என் கருத்துக்களை நான் பிரச்சாரம் செய்ய விரும்புகிறேன். நீங்கள் மகத்தான பணி செய்துள்ளீர்கள், ஆனால் அது எனக்குப் பெயரையும், புகழையும் மட்டுமே சம்பாதித்துத் தந்துள்ளது. உலகத்தின் பாராட்டைப் பெறுவதற்காகச் செலவிடுவதைவிட என் வாழ்க்கை அதிக மதிப்புள்ளது. அத்தகைய முட்டாள்தனங்களுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை. கருத்துக்களைப் பரவச் செய்வதற்காக, அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக இதுவரை இந்தியாவில் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை.” என அக்கடிதத்திலி குறிப்பிட்டுள்ளார்.
- ↑ தற்போதைய பிரகாசம் சாலை