being created

படை வழக்கு

From Tamil Wiki
Revision as of 14:32, 17 February 2025 by Jayashree (talk | contribs) (Created page with "படை வழக்கு காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. மறம், மானம் முதலியவற்றை உடைய மறவர்களுக்கு போர்க்கருவிகளை, காஞ்சி மன்னன் வழங்குவதைக் கூறுவது. ==புறப்பொருள் வெண்பாமாலை == முத்து அணி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

படை வழக்கு காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. மறம், மானம் முதலியவற்றை உடைய மறவர்களுக்கு போர்க்கருவிகளை, காஞ்சி மன்னன் வழங்குவதைக் கூறுவது.

புறப்பொருள் வெண்பாமாலை

முத்து அணிகலன்களைப் பூண்கின்ற மறப்பண்பு வாய்ந்த காஞ்சி மன்னன், தன்னுடைய மறவர்க்குப் படைக் கருவிகளை வழங்கினான். வழங்கினமையைக் கூறுவது படைவழக்கு என்னும் துறையாம்.

முத்துஅவிர்பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்குப் படைவழங்கின்று

வெண்பா

ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
ஐயிலை யெஃக மவைபலவும் – மொய்யிடை
ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான்
வாட்கடி வன்க ணவர்க்கு.

பொருள்: மறக்குடியில் வந்த காஞ்சி மறவர்க்கு மன்னன் படைக் கருவிகளை வழங்கினான்; இதனால் தனக்கு உணவு கிட்டுவது உறுதி எனக் கூற்று (யமன்) மகிழ்ந்தது. இதிலிருந்து துறைப்பொருள் பொருந்துவது புலப்படுகிறது.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.