being created

காமன்

From Tamil Wiki
Revision as of 01:07, 1 February 2022 by Navingssv (talk | contribs) (காமன்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காமன் அதிபதி: காமத்தின் துணைவியார்: ரதி தேவி வாகனம்: கிளி ஆயுதம்: கரும்புவில் மற்றும் மலர்க்கணைகள் கொடி: மகரம் அல்லது சுறா மீன்

காமன் அல்லது காம தேவன் என்பது காமத்தின் அதிபதியாக விளங்கும் கடவுள். கரும்பால் ஆன வில்லை வலது கரத்திலும், வில்லின் நாண் தேனிகளால் ஆனது. தாமரை, அசோகம், முல்லை, மா, குவளை என்னும் ஐந்து மலர்களால் ஆனது காமனின் அம்பு. காமனின் வாகனமாக கிளியும் கொடியின் சின்னத்தில் மகரம் அல்லது சுறா மீனும் அமையப் பெற்றிருக்கும். மேல் சொன்ன ஐந்து மலர்கள் போக உன்மதனம், தபனம், சோசனம், ஸ்தம்பனம் மற்றும் சம்மோஹனம் என்ற ஐந்து மலர்களையும் காமனின் அம்பாக சொல்வர்.

காம தேவனின் மனைவி ரதி தேவி. காமனுக்கு உரிய காலமென வசந்த காலம் சொல்லப்படுகிறது. காமனுக்கு புராணங்களில் மதனன், மன்மதன், மாரன், ப்ரத்யூமனன், மீனகேதனன், கந்தரவன், தார்பகன், அனங்கன், காமன், பஞ்சாக்‌ஷரன், சாம்பராரி, மனசிஜன், குசுமேசு, அனன்யஜன், புஷ்பதன்வன், ரதிபதி, மகரதுவாஜன், ஆத்மபூஷன், இரஜன், இம்சன், கிங்கரன், அபிரூபன், ருதுகாலகேலன், காஞ்சனன், ரமணன், திபாகன், மதுதீபன், சமந்தகன், முகிரன், ருபஸ்த்ரன், வாமன், புஷ்பகேதனன், மகரகேது, ரதிநாயகன், ரகுவர்த்தனன், சம்சரகுரு, கடாயிதுனு, மபதியன், மாயன் போன்ற பிற பெயர்களும் புராணங்களில் சொல்லப்படுகிறது.

தோற்றம்

பிரம்மனின் வலது மார்பில் இருந்து தர்ம பிரஜாதிபதி தோன்றினார். அழகானான தர்மரின் மகன்களாக சாமன், காமன், ஹர்ஷன் தோன்றினர். அவர்களுள் காமன் அழகின் கடவுளானான். மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் வரும் பாகம் - 66 இல் காமனின் மனைவி ரதி தேவி என்றும், சாமனின் மனைவி பிராப்தி என்றும், ஹர்ஷனின் மனைவி நந்தா என்றும் குறிப்பு வருகிறது.

காலிக புராணத்தின் படி பிரம்மன் பத்து பிரஜாதிபதிகளை தோற்றுவித்தார். அதன்பின் சந்தியா என்னும் பெண்ணை உருவாக்கினார். சந்தியா தோன்றும் கணம் அவள் அழகில் பிரம்மனும் மற்ற பிரஜாதிபதிகளும் மெய் மறந்து தங்கள் செய் தொழில் மறந்து எல்லோர் சிந்தையும் சந்தியா என்ற ஒன்றின் மீது கூடியது. அந்த கணத்தில்ல் பிரம்மனின் மனதில் இருந்து அழகிய இளைஞன் ஒருவன் கையில் மலர்க்கணைகளுடன் எழுந்து வந்தான். காமன் வெளியே வந்ததும் பிரம்மனிடம், “நான் யாரை மகிழ்விக்க வேண்டும்?” எனக் கேட்டான். பிரம்மன், “மண்ணில் வாழும் அனைத்து மனிதர்களின் மனமும் உன் அம்பை நோக்கியே குவியட்டும். நீ தட்சனின் மகளாகிய ரதி தேவியை மணந்து வாழ்க” என வரமளித்தார்.

காமன் பிறந்ததும் பிரம்மனிடம் சென்று ”காம தர்ப்பயாமி” (நான் யாரை மகிழ்விக்க வேண்டும்?) என வினவியதால் அவனை கந்தர்வன் என்றழைக்கின்றனர். பிரம்மனின் மனதில் இருந்து தோன்றியதால் மன்மதன் எனக் காமன் அழைக்கப்படுகிறான். தேவர்களில் அழகியவன் ஆதலால் காமன் என்கின்றனர்.

புராணக் கதைகள்

பிரம்மனின் சாபம்

பிரம்மன் படைக்கும் பொருட்டு பரபிரம்மம் நோக்கி தவமிருந்தார். அத்தருணத்தில் பிரம்மனின் மனதில் காம எண்ணங்கள் துளிர்த்தது. அந்த கணத்தில் பிரம்மனின் மனதில் இருந்து ஒரு பெண் தோன்றினாள். பிரம்மா அவளை ”மானுடர்களின் நாவில் என்றும் அமர்க” என்று சொல்லி சரஸ்வதி எனப் பெயரிட்டு தன் மனைவியாக்கிக் கொண்டார்.

தன் தவம் கலைந்ததை எண்ணி வருந்தினார். அதற்கு காரணகர்த்தாவான காமனை நோக்கி, “என் தவம் கலைத்த நீ சிவனின் மூன்றாம் கண்ணான நெற்றி கண்ணால் எரிக்கப்படுவாய்” என சாபமிட்டார். அதன்பின் பிரம்மன் தன் காம இச்சைகளை அத்ரி முனிவருக்கு வழங்கினார். அவர் தன் மனைவி அனசூயையிடம் அதனை வெளிப்படுத்த அவர்களிடம் இருந்து சந்திரன் பிறந்ததாக பிரம்ம புராணத்தின் கதை சொல்கிறது.

(பிரம்ம புராணம் - பாகம் 43)

காம தகனம்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.