ஒக்கூர்மாசாத்தியார்

From Tamil Wiki

ஒக்கூர்மாசாத்தியார் சங்ககாலப் பெண்பாற் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருக்கோட்டியூர் என்னும் ஊருக்கு அருகிலுள்ள ஊர் ஒக்கூர். (தற்போது இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). இந்த ஊரில் பிறந்து வாழ்ந்த மாசாத்தியார் புத்த சமயத்தைத் தழுவிய சங்க காலத்தவர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய பாடல்கள் அகநானூற்றில் இரண்டும் (பாடல்:324, 384), குறுந்தொகையில் ஐந்தும் (பாடல்: 126, 139, 186, 220 மற்றும் 275) புறநானூற்றில் ஒன்றுமாக (பாடல்: 279) இடம் பெற்றுள்ளன.

பாடல் நடை

உசாத்துணை