தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம்
From Tamil Wiki
தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம் ( 1994) குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ஆய்வு நூல். தஞ்சை பெருவுடையார் ஆலயம் பற்றிய விரிவான ஆய்வுகள் அடங்கியது, சிற்பவியல், ஆகமமுறைகள் மற்றும் வழிபாட்டுமுறைகளை விவரிக்கும் வரலாற்றாய்வுநூல்.
எழுத்து, வெளியீடு
1994-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டிற்காக குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய 'தஞ்சாவூர்' என்னும் நூல் பெரிய கோவிலின் 1001-ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்தது. இந்த ஆய்வு 1995-ஆம் ஆண்டு அகரம் பதிப்பகத்தால் நூல் வடிவம் கண்டது. இதன் விரிவாக்கமாக குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய தஞ்சைபெரியகோயில்- இராஜராஜேச்சரம் என்னும் ஆய்வுநூல் 2010-ல் வெளிவந்தது. 2020ல் அன்னம் வெளியீடாக இந்நூல் இராஜராஜேச்சரம் என்னும் பெயரில் வெளிவந்தது.