வாள் மங்கலம்
வாள் மங்கலம் பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசனின் வாளின் சிறப்பைக் கூறுவது வாள் மங்கலம்.
விளக்கம்
வாளைப் புகழ்தல் என்பது பொருள். புறப்பொருள் வெண்பாமாலை அரசனுடைய வெற்றி விளைவிக்கும் வாளை வாழ்த்துவது அவன் வீரத்தை வாழ்த்துவது என்று புறப்பொருள் வெண்பாமாலை யின் கொளு குறிப்பிடுகிறது.
கயக்கருங் கடல்தானை
வயக்களிற்றான் வாள்புகழ்ந்தன்று (கொளு.35)
எனக் கொளு விளக்குகிறது. ‘கலக்குவதற்கு இயலாத பெரிய கடல் போன்ற படையினையும் வலிமை மிக்க களிற்றையும் உடைய அரசனது வாளைப் புகழ்தல்’ என்பது பொருள்.
வெற்றி மன்னனுடைய வாளின் சிறப்பை வெண்பா சிறப்பிக்கிறது. ‘அரண்மனையுள் மகளிர் அரசனது செங்கோலின் சிறப்பைப்பாட, வெற்றியைப் பெறும் பொருட்டு அவன் கைவாள் சினத்தை வெளிப்படுத்தும்’ எனக் காட்டுகிறது, வெண்பா.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.