first review completed

கந்தையா உருத்திராபதி

From Tamil Wiki
கந்தையா உருத்திராபதி (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

கந்தையா உருத்திராபதி (டிசம்பர் 14, 1927) ஈழத்து இசை நாடகக் கலைஞர். ஆயிரம் மேடைகளுக்குமேல் நடித்தவர். வானொலி இசை நாடகங்களிலும் நடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை தெல்லிப்பிழையில் டிசம்பர் 14, 1927-ல் கந்தையா உருத்திராபதி பிறந்தார். வட்டுக்கோட்டை சைவப்பிரகாச வித்யாசாலையில் பயின்றார். பாடக்கூடிய ஆற்றல் கொண்டிருந்தார். வட்டுக்கோட்டை பிளவத்தை செல்லத்துரையிடம் சங்கீதம் கற்றார். 1947-ல் தெல்லிப்பழையில் திருமணம் செய்து கொண்டார். தெல்லிப்பழையிலிருந்து மானிப்பாய் இடம்பெயர்ந்தார்.

கலை வாழ்க்கை

ஆறு வயதில் ராமாயண நாடகத்தில் ராமனாக நடித்து பாராட்டப்பட்டார். வட்டுக்கோட்டை பிளவத்தை செல்லத்துரையின் அல்லி அர்ச்சுனா நாடகத்தில் அர்ச்சுனனாக நடித்தார். பதினேழு வயதில் ஞானசனுந்தரி, சத்தியவான் சாவித்திரி நாட்கத்தில் நடித்தார். 1953-ல் நடிகமணி வி.வி. வைரமுத்துவின் வசந்தகானசபாவில் இணைந்தார். வைரமுத்து பெண் வேடமேற்று நடித்த காலத்தில் அவருக்கு இணையாக ஆண் வேடமிட்டு நடித்தார்.

இசை நாடகங்களை பல இடங்களிலும் அரங்கேற்றியபோது நடித்தார். உடப்பு முந்தல் திரெளபதி அம்மன் கோவில் பருத் தித்துறை சாந்தா தோட்டம், மானிப்பாய், சங்கானை, ஊர்காவற் றுறை, வசவிளான், அச்சுவேலி, நெல்லியடி, கரவெட்டி , சாவகச் சேரி, மிருசுவில், கோப்பாய், கழிபுரம், வட்டுக்கோட்டை, நவாலி, அராலி, கொழும்பு ஆகிய இடங்களில் நாடகங்கள் நடித்தார். வானொலி இசை நாடகங்களிலும் நடித்தார்.

இணைந்து நடித்தவர்கள்

விருதுகள்

  • பதினாறு வயதில் யாழ் யூடிஸ் மண்டபத்தில் நடைபெற்ற அல்லி அர்ச்சுனா நாடகத்தில் அர்ச்சுனனாக நடித்து முதல் பரிசு பெற்றார்.

நடித்த நாடகங்கள்

  • ராமாயணம் - ராமர்
  • அல்லி அர்ச்சுனா - அர்ச்சுனன்
  • சத்தியவான் சாவித்திரி - நாரதர்
  • வள்ளி திருமணம் - வேலன், வேடன், விருந்தன், நாரதர்
  • பூதத்தம்பி - கைலாயபிள்ளை
  • சாரங்கதாரா - சாரங்கதாரா, சுமந்திரன்
  • ஞானசவுந்தரி - லேனாள்
  • கோவலன், கண்ணகி - கோவலன்
  • பவளக்கொடி - அர்ச்சுனா
  • மார்க்கண்டேயன் - மிருகண்டமுனிவர்
  • மயானகாண்டம் - சத்தியகீர்த்தி, நாரதர்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.