கபிலரின் மலர்கள்
From Tamil Wiki
கபிலரின் மலர்கள்: சங்க காலப் புலவராகிய கபிலர் பத்துப்பாட்டின் ஒரு பகுதியாகிய குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அவை ஆய்வாளர்களால் பட்டியலிடப்பட்டுள்ளன உ.வே.சாமிநாதையர் ஆய்வு
மலர்களின் பட்டியல்
கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...
- 1. காந்தள்
- 2. ஆம்பல்
- 3. அனிச்சம்
- 4. குவளை
- 5. குறிஞ்சி
- 6. வெட்சி
- 7. செங்கொடுவேரி
- 8. தேமா (தேமாம்பூ)
- 9. மணிச்சிகை (குன்றிமணி )
- 10. உந்தூழ் (பெரு மூங்கில்)
- 11. கூவிளம் (வில்வம்)
- 12. எறுழ் ( எறுழம்பூ)
- 13. சுள்ளி (முள் கனகாம்பரம்)
- 14. கூவிரம்
- 15. வடவனம் (துளசி)
- 16. வாகை
- 17. குடசம்
- 18. எருவை (கோரை)
- 19. செருவிளை(வெள்ளைக்காக்கணாம் பூ)
- 20. கருவிளம்
- 21. பயினி
- 22. வானிஓமம்
- 23. குரவம்
- 24. பசும்பிடி
- 25. வகுளம்(மகிழம்)
- 26. காயா
- 27. ஆவிரை (ஆவாரம்பூ)
- 28. வேரல் (மூங்கில்)
- 29. சூரல் பிரம்பு
- 30. சிறுபூளை
- 31. குறுநறுங்கண்ணி
- 32. குருகிலை
- 33. மருதம்
- 34.கோங்கம் (நெல்லி)
- 35. போங்கம்
- 36. திலகம்
- 37. பாதிரி
- 38. செருந்தி
- 39. அதிரல் (காட்டு மல்லி)
- 40. சண்பகம்
- 41. கரந்தை
- 42. குளவி
- 43. மாமரம் (மாம்பூ)
- 44. தில்லை
- 45. பாலை
- 46. முல்லை
- 47. கஞ்சங்குல்லை
- 48. பிடவம்
- 49. செங்கருங்காலி
- 50. வாழை
- 51. வள்ளி (பூசணி)
- 52. நெய்தல்
- 53. தாழை
- 54. தளவம்
- 55. தாமரை
- 56. ஞாழல்
- 57. மௌவல்
- 58. கொகுடி(கொடி முல்லை)
- 59. சேடல்
- 60. செம்மல் முல்லை
- 61. சிறுசெங்குரலி
- 62. கோடல் வெண்காந்தள்
- 63. கைதை (தாழையின் ஒருவகை)
- 64. வழை
- 65. காஞ்சி
- 66. கருங்குவளை (மணிக் குலை)
- 67. பாங்கர்
- 68. மரவம், மராஅம் (கடம்பு)
- 69. தணக்கம் (நுணா)
- 70. ஈங்கை
- 71. இலவம்
- 72. கொன்றை
- 73. அடும்பு
- 74. ஆத்தி (திருவாத்தி)
- 75. அவரை
- 76. பகன்றை (கிலுகிலுப்பை)
- 77. பலாசம் (முள்முருக்கு)
- 78. பிண்டி (அசோகம்)
- 79. வஞ்சி
- 80. பித்திகம் (பிச்சி, சாதிமுல்லை)
- 81. சிந்துவாரம் (நொச்சி)
- 82. தும்பை
- 83. துழாய் (நீலத்துளசி, கிருஷ்ணதுளசி)
- 84. தோன்றி
- 85. நந்தி
- 86. நறவம்
- 87. புன்னாகம் (புங்கம்)
- 88. பாரம் (பருத்தி)
- 89. பீரம் (பீர்க்கு)
- 90. குருக்கத்தி
- 91. ஆரம் (சந்தனம்)
- 92. காழ்வை (அகில்)
- 93. புன்னை
- 94. நரந்தம் (நார்த்தம்)
- 95. நாகம் (நாவல்)
- 96. நள்ளிருணாறி
- 97. குருந்தம் (காட்டு நாரத்தம்)
- 98. வேங்கை
- 99. புழகு (மலையெருக்கு)
உசாத்துணை
✅Finalised Page