being created

அச்சோப் பதிகம்

From Tamil Wiki
Revision as of 07:44, 21 December 2024 by Jayashree (talk | contribs) (Created page with "அச்சோப் பதிகம் எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் இறுதிப் பதிகம்(51-ம் பதிகம்). சிவனுடைய கருணையை வியந்து பாடிய பதிகம் என்பதால் அச்சோ என்ற வியப்பு இடைச் சொல்லை பெயராகப் பெற்றது...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அச்சோப் பதிகம் எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் இறுதிப் பதிகம்(51-ம் பதிகம்). சிவனுடைய கருணையை வியந்து பாடிய பதிகம் என்பதால் அச்சோ என்ற வியப்பு இடைச் சொல்லை பெயராகப் பெற்றது.

ஆசிரியர்

அச்சோப் பதிகம் மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் 51-வதும், இறுதியானதுமான பதிகம்.

நூல் அமைப்பு

அச்சோப் பதிகம் 9 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் கிடைக்காமல் போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 'அநுபவ வழி அறியாமை' என்ற உப தலைப்பைக் கொண்டது. 'அச்சோ' என்பது வியப்பு இடைச்சொல். இறைவன் தமக்குச் செய்த கருணையை அச்சோ என்று வியந்து பாடிய பதிகமாதலின், இஃது அச்சோப்பதிகம் எனப்பட்டது.

பாடல் நடை

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.