கபில முனிவர்

From Tamil Wiki
Revision as of 18:37, 25 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கபில முனிவர் (கபில ரிஷி) மகாபாரதத்திலும் பிற புராணங்களிலும் குறிப்பிடப்படும் முனிவர். கர்த்தம முனிவரின் மகன். சக்ரதனுஸ் என்றும் இவர் அழைக்கப்பட்டார். பிறப்பு பிரம்மனின் மகனா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கபில முனிவர் (கபில ரிஷி) மகாபாரதத்திலும் பிற புராணங்களிலும் குறிப்பிடப்படும் முனிவர். கர்த்தம முனிவரின் மகன். சக்ரதனுஸ் என்றும் இவர் அழைக்கப்பட்டார்.

பிறப்பு

பிரம்மனின் மகனாகிய கர்த்தம பிரஜாபதிக்கு பிரம்மனின் வழிவந்தவளும் சுயம்புமனுவின் மகளுமாகிய தேவாகுதி என்னும் பெண்ணில் கபிலர் பிறந்தார். சுயம்பு மனுவுக்கு பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரண்டு மகன்களும் ஆகுதி, தேவாகுதி ,பிரஸ்துதி என்னும் மூன்று மகள்களும் பிறந்தனர். ருசி, கர்த்தமன்,தக்ஷன் ஆகிய பிரஜாபதிகளுக்கு அவர்களை சுயம்புமனு மணம்புரிந்து கொடுத்தார். ஆகுதி தேவிக்கு யக்ஞன் என்னும் மகனும் தேவாகுதிக்கு கபிலனும் பிறந்தனர். பிரஸ்துதிக்கு ஏராளமான மகள்கள் பிறந்தனர். (தேவிபாகவதம், எட்டாம் காண்டம் ) தேவாகுதிக்கு ஒன்பது மகள்களும் கபிலன் என்னும் ஒரே மகனும் பிறந்ததாக பாகவதம் சொல்கிறது (பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம்)

பெயர்கள்

கபிலனுக்கு சக்ரதனுஸ் என்னும் பெயரும் இருந்தது. (மகாபாரதம் உத்யோக பர்வம் 109 ஆம் அத்யாயம் 17 ஆம் செய்யுள்).

கபிலர் விஷ்ணுவின் அவதாரம்

கபிலர் விஷ்ணுவின் அவதாரம் என்று விஷ்ணுபுராணம் சொல்கிறது.

கதைகள்

அன்னைக்கு ஞானம் அளித்தது

கர்த்தம முனிவர் மறைந்தபோது துயரம் அடைந்த தேவாகுதி தன் மகனிடம் ஞானம் கோரினாள். கபிலர் அவளுக்கு பக்தி மார்க்கத்தை கூறினார். அவள் முக்தியடைந்தாள். (பாகவதம், மூன்றாம் ஸ்கந்தம்)

சகரரின் மகன்களை எரித்தது