சிந்நயச் செட்டியார்

சிந்நயச் செட்டியார் (வீர.லெ. சிந்நயச் செட்டியார்) (1855-1900) தமிழ்ப்புலவர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர். ஆசுகவி. பல்வேறு இலக்கிய நூல்களை இயற்றினார். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைய உதவினார். முதன் முதலில் நகரத்தார் வரலாற்றை எழுதியவராக அறியப்படுகிறார்
பிறப்பு, கல்வி
சிந்நயச் செட்டியார், 1855-ல், தேவகோட்டையில் இலக்குமணச் செட்டியார்-லெட்சுமி ஆச்சிக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை உள்ளூர் திண்ணைப் பள்ளியில் படித்தார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவரும், ’வன்றொண்டர்' என்று போற்றப்பட்டவருமான நாராயணன் செட்டியாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை தனது மானசீக குருவாகக் கொண்டார்.
தனி வாழ்க்கை
சிந்நயச் செட்டியார் மணமானவர். மனைவி மீனாட்சி. மகன் காசி.

இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.