being created

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

From Tamil Wiki

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறும் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியம். அதிராவடிகளால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

நூல் அமைப்பு

மூத்தபிள்ளையார்‌ திருமும்மணிக்கோவை முப்பது பாடல்களால்‌ இயன்றுளது. இந்நூலின்‌ ஏடுகள்‌ சிதைந்திருந்ததால் 24 முதல்‌ 30 வரையுள்ள பாடல்கள்‌ ஏழும்‌ கிடைக்கவில்லை. கிடைத்த பாடல்களிலும்‌ சில தொடர்கள்‌ பொருள்விளங்கா நிலையிற்‌ சிதைந்துள்ளன

மூத்தபிள்ளையார்‌ இருகைகளையுஞ்‌ சேர்த்துத்‌ தட்டிச்‌ சப்பாணி கொட்டுதலும்‌, திருமுகம்‌ அசையச்‌ செங்கீரையாடுதலும்‌ ஆகிய பிள்ளை விளையாட்டினை மேற்கொண்டு உலகவுயிர்களுக்கு இன்பஞ்செய்யும்‌ திறத்தை,

விநாயகர் உலகைச் சுற்றி வந்து தந்தையிடம் மாம்பழம் பெற்ற கதை,

பாடல் நடை

அகவல்

ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பிற்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலமினி இருநிலத் திடையே. (1)

வெண்பா

நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி
  கொட்டும் -கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.  (2)


  கட்டளைக் கலித்துறை
மணிசிந்து கங்கைதன் மானக்
  குருளையை வாள்அரக்கர்
அணிசிந்த வென்றஎம் ஐயர்க்
  கிளங்கன்றை அங்கரும்பின்
துணிசிந்த வாய்ப்பெய்த போதகத்
  தைத்தொடர்ந் தோர்பிறவிப்
பிணிசிந்து கார்முளை யைப்பிடித்
  தோர்க்கில்லை பேதுறலே.  3

உசாத்துணை

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை-சைவம்.ஆர்க்

பன்னிரு திருமுறை- பதிப்பாசிரியர்: இராச வசந்தகுமார், ஆர்கைவ் வலைத்தளம் ,



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.