அருகந்தகிரி சமண மடம்
From Tamil Wiki
அருகந்தகிரி சமண மடம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அமைந்த திருமலை என்ற குன்றின் மேல் அமைந்த திருமலை சமணர் கோயில் அருகே நிறுவப்பட்ட சமண மடம்.
இடம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூரிலிருந்து ஆரணி செல்லும் வழியில் வடமாதிமங்களத்திலிருந்து நான்கு கிலோமீட்டரில் உள்ள ஊர். திருமலை எனும் குன்றில் அமைந்த சமணர் கோயில் அருகே அருகந்தகிரி சமண மடம் நிறுவப்பட்டது.
வரலாறு
1998-ல் நிறுவப்பட்ட சமண மடம்.
அருகந்தகிரி சமண மடம்
இம்மடத்தின் தலைவராக பட்டாரக தவளகீர்த்தி சுவாமிகள் உள்ளார். ஆச்சாரிய சிறீ அகலங்கா கல்வி அறக்கட்டளையின் கீழ் இம்மடம் செயல்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page