being created

சக்தி அருளானந்தம்

From Tamil Wiki
Revision as of 23:59, 29 November 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சக்தி அருளானந்தம்

சக்தி அருளானந்தம் (அருள்மொழி) (பிறப்பு: ஏப்ரல் 17, 1962) தமிழ்க் கவிஞர், ஓவியர், இலக்கிய விமர்சகர். மின் சாதனப் பழுது நீக்குநர். தன் கவிதை முயற்சிகளுக்காக தஞ்சை ப்ரகாஷ் விருது, திருப்பூர் சக்தி விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

அருள்மொழி என்னும் இயற்பெயரைக் கொண்ட சக்தி அருளானந்தம்,  ஏப்ரல் 17, 1962 அன்று, சேலம் செவ்வாய்ப்பேட்டையில், ரங்கநாதன் - சரஸ்வதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். செவ்வாய்ப்பேட்டை தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். சூழல்களால் குடும்பம் தஞ்சைக்குச் சென்று வசித்ததால், அங்குள்ள திருக்களர் கிராமத் தொடக்கப் பள்ளியிலும், ராயநல்லூர் கிராம நடுநிலைப் பள்ளியிலும் படித்தார். கோட்டூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, தாயின் மறைவால் இடை நின்றார். மதுரை காமராசர் கல்லூரியில் பிரீ ஃபவுண்டேஷன் படிப்பை (Pre Foundation Course) நிறைவு செய்தார். தட்டச்சு பயின்று தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் முதுநிலைச் சான்றிதழ் பெற்றார்.

தனி வாழ்க்கை

மின் சாதனங்களைப் பழுது நீக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொண்ட சக்தி அருளானந்தம், சேலத்தில் உள்ள ’விக்னேஷ் டிரேடர்ஸ்’ என்ற நிறுவனத்தில் மின் சாதனங்கள் பழுது நீக்குபவராகப் பணியாற்றினார். மணம் செய்து கொள்ளவில்லை.

சக்தி அருளானந்தம் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

சக்தி அருளானந்தம் கல்கி, ஜெயகாந்தன், அகிலன் போன்றவர்களது படைப்புகளை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார்.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.