under review

பெருமாளையர்

From Tamil Wiki
Revision as of 11:33, 16 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்)

பெருமாளையர் (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியப்புலவர். நெல்லை வருக்கக் கோவை முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

மானாமதுரைக்கு அருகிலுள்ள வேம்பத்தூரில் சோழிய அந்தணர் குலத்தில் பிறந்தார். இளவயதில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலவரானார். திருநெல்வேலிக்கு வந்து ஆசிரியப்பணி செய்தார். வேம்பத்தூருக்குச் சென்று திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் பிறந்தான். பெருமாளையாரை வீரைக்கவிராய பண்டிதர் என்றும் கூறுவர்.

இலக்கிய வாழ்க்கை

நெல்லையப்பர் மீது நெல்லை வருக்கக் கோவை நூலைப் பாடினார். செய்யுள்கள் பல இயற்றினார்.

நூல் பட்டியல்

  • நெல்லை வருக்கக் கோவை
  • பராபரமாலை

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Oct-2023, 09:36:42 IST