தாயாரம்மாள்
From Tamil Wiki
தாயாரம்மாள் தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். "கந்தையாவின் கதி" என்ற சிறுகதையை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
குலையனூரில் பிறந்தவர். "ஸ்ரீமதி வே. தாயாரம்மாள்" என்ற பெயரில் பஞ்சாமிர்தம் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் நீதிக்கட்சியைச் சார்ந்து இயங்கிய காளஹஸ்தியைச் சேர்ந்த அலர்மேல் மங்கைத் தாயாரம்மாள். சென்னையில் வசித்து வந்த இவர் எம்.எல்.சி யாக இருந்தார். இச்சிறுகதை எழுதியது இவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1912-ல் பெண்கல்வி இதழை நடத்தி வந்த "தாயாரம்மாள்" எழுதியிருக்கலாம் எனவும் அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
'கந்தையாவின் கதி' என்ற சிறுகதையை பஞ்சாமிர்தம் இதழில் 1924-ல் எழுதினார். இவரின் பிற கதைகள் ஏதும் இவ்விதழில் வெளிவரவில்லை.
நூல்கள்
- கந்தையாவின் கதி (சிறுகதை)
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Jun-2023, 06:19:10 IST