ஒரு மனிதனின் கதை

From Tamil Wiki
Revision as of 08:34, 4 June 2022 by Jeyamohan (talk | contribs)
ஒரு மனிதனின் கதை

ஒரு மனிதனின் கதை (1980 ) சிவசங்கரி எழுதிய நாவல். குடிப்பழக்கம் குடிநோயாக மாறி ஒரு மனிதனின் வாழ்க்கையை அழிப்பதையும் அவன் அதிலிருந்து மீள்வதையும் சித்தரிக்கிறது. இது உண்மையில் தானறிந்த ஒருவரின் வாழ்க்கைக்கதை என சிவசங்கரி சொல்லியிருக்கிறார். தமிழில் குடிநோய் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கிய படைப்பு

எழுத்து, வெளியீடு

சிவசங்கரி எழுதிய ஒரு மனிதனின் கதை 1980ல் ஆனந்தவிகடன் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. 1982ல் வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது

கதைச்சுருக்கம்

தியாகு என்னும் இளைஞன் அழகிய குடும்பச்சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கையில் விளையாட்டாகத் தொடங்கிய குடிப்பழக்கம் அவனை அடிமையாக்கி, குடிநோயாளியாக ஆக்கி, அவன் வாழ்க்கையை அழிக்கிறது. குடிக்கு எதிராகச் செயல்படும் அமைப்புகளின் உதவியுடன் தியாகு அதிலிருந்து மீள்கிறான்.

திரைவடிவம்

இலக்கிய இடம்

குடிக்கு எதிராக தமிழக அளவில் ஒரு விழிப்புணர்வை உருவாக்கிய நூல் என ஒரு மனிதனின் கதை கூறப்படுகிறது. குடியை கற்பனாவாதச் சாயலுடன் மிகைப்படுத்திய தேவதாஸ் (சரத்சந்திர சட்டர்ஜி) போன்ற கதைகளே இலக்கியச் சூழலில் மிகுந்திருந்தன. குடி ஒரு மீறலோ ஒழுக்கக்கேடோ அல்ல, அது ஒரு நோய் என நிறுவிய நாவல் இது. நம்பிக்கையூட்டும் முடிவும் கொண்டது.

உசாத்துணை