த.நா.குமாரசாமி

From Tamil Wiki
Revision as of 12:22, 30 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "த.நா.குமாரசாமி (தண்டலம் நாராயணசாமி குமாரசாமி) ( ) தமிழில் நாவல், சிறுகதை ஆகியவற்றை எழுதிய எழுத்தாளர். முதன்மையாக வங்கமொழி நாவல்களை மொழியாக்கம் செய்தவராக அறியப்படுகிறார். இதழாளர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

த.நா.குமாரசாமி (தண்டலம் நாராயணசாமி குமாரசாமி) ( ) தமிழில் நாவல், சிறுகதை ஆகியவற்றை எழுதிய எழுத்தாளர். முதன்மையாக வங்கமொழி நாவல்களை மொழியாக்கம் செய்தவராக அறியப்படுகிறார். இதழாளர், பல நவீன இலக்கியப் படைப்புக்களை செம்மைசெய்து உதவியவர்.

பிறப்பு, கல்வி

த. நா. குமாரசாமி, தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாஸ்திரி என்பவருக்கு 1907ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்தவர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த. நா. சேனாபதி இவருடைய உடன்பிறந்தவர்.இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று பி.ஏ பட்டம் பெற்றார். சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

நூல்கள்

சிறுகதை
  • கன்யாகுமாரி
  • குழந்தை மனம்
  • சக்தி வேல்
  • தேவகி
  • மோகினி
  • பிள்ளைவரம்
  • போகும் வழியில்
  • வஸந்தா
  • கதைக்கொடி
  • அன்னபூரணி
  • கதைக் கோவை-3
  • கதைக் கோவை-4
  • இக்கரையும் அக்கரையும்
  • நீலாம்பரி
  • சந்திரகிரகணம்
நாவல்
  • ராஜகுமாரி விபா
  • சந்திரிகா
  • இல்லொளி
  • மனைவி
  • உடைந்தவளையல்
  • ஶ்ரீகண்டனின் புனர்ஜன்மம்
  • தீனதயாளு
  • மிருணாளினி
  • இந்திரா
  • தேவதாஸ்
  • ஸெளதாமினி
  • லலிதா
  • கானல் நீர்
  • அன்பின் எல்லை
  • ஒட்டுச்செடி
  • வீட்டுப்புறா
மொழிபெயர்ப்பு
  • கோரா – ரவீந்திரநாத் தாகூர்
  • புயல் - ரவீந்திரநாத் தாகூர்
  • விஷ விருட்சம் – பக்கிம் சந்திரர்
  • இளைஞனின் கனவு – நேதாஜி சுபாஸ்சந்திர போசு
  • ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்தோபாத்தியாய்
  • பொம்மலாடம் (புதுல் நாச்சார் கி இதிகதா வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய)
  • வினோதினி (இரபீந்திரநாத் தாகூர்)
  • யாத்ரீகன்(பிரபோத் குமார் சான்யாஸ்)