தந்திரி

From Tamil Wiki
Revision as of 05:12, 26 May 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ந்தந்திரி: (தந்த்ரி) கேரளத்து இந்து ஆலயங்களில் ஆலயங்களை நிறுவவும், வழிபாடுகளையும் திருவிழாக்களையும் ஒருங்கிணைக்கவும் பொறுப்பு கொண்டவர். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ந்தந்திரி: (தந்த்ரி) கேரளத்து இந்து ஆலயங்களில் ஆலயங்களை நிறுவவும், வழிபாடுகளையும் திருவிழாக்களையும் ஒருங்கிணைக்கவும் பொறுப்பு கொண்டவர். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்து இந்து ஆலயங்களில் இவர்கள் பொறுப்பில் உள்ளனர். பழைய திருவிதாங்கூர் ஆட்சிக்காலத்தில் இவர்கள் நியமிக்கப்பட்டனர். இப்பதவி இன்றும் வாரிசுரிமையாகத் தொடர்கிறது.

தாந்த்ரீகபூசை

தமிழ்நிலத்தில் சோழ,பாண்டிய நாட்டு ஆலயங்களில் சைவ, வைணவ ஆகமங்களின் அடிப்படையில் பூசை நிகழ்கிறது. கேரளத்து ஆலயங்களில் தந்த்ரசமுச்சயம் போன்ற சில தாந்த்ரீக நூல்களின் நூலின் அடிப்படையிலேயே ஆலய தெய்வங்கள் நிறுவப்பட்டு, வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தந்த்ரம் என்னும் சொல் ‘செயல்முறை’ என பொருள்கொண்டது. உருவ வழிபாடு, ஆலயவழிபாடு சார்ந்த குறியீட்டுச் செயல்பாடுகளை அச்சொல் குறிக்கிறது. தாந்த்ரீகமுறை பல்வேறு மறைஞானக் கொள்கைகள், வழிபாட்டுச் சடங்குகள், அவற்றுக்குரிய மந்திரங்கள், நடைமுறை நெறிகள் ஆகியவை அடங்கியது.

தந்த்ரிகள்

உரிய தந்த்ரநூலைக் கற்றறிந்து, அந்நூலின் அடிப்படையில் ஆலயங்களை நிறுவவும், வழிபாடுகளை நடத்தவும் நியமிக்கப்பட்டவர்கள் தந்த்ரிகள் எனப்படுகின்றனர். பொதுவாக இவர்கள் நம்பூதிரி பிராமணர்கள். போற்றிகள் எனப்படும் துளு பிராமணர்களும் தந்த்ரிகளாக நியமிக்கப்படுவதுண்டு. இது தொன்மையான ஆசாரங்களின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஒரு பதவி. குடும்பப் பாரம்பரியமாக இப்பதவி மூத்தமகன் அல்லது மருமகன் வழியாக அடுத்த தலைமுறைக்கு கைமாறப்படுகிறது. பெரிய ஆலயங்களுக்கு அவ்வாலயங்களுக்குரிய தந்த்ரிகள் உண்டு. ஒரு வட்டாரத்திலுள்ள அனைத்து ஆலயங்களுக்கும் பொறுப்பு கொண்ட தந்த்ரிகளும் உண்டு

நவீன மாற்றங்கள்