இயந்திர தெய்வம் (சிறுகதை)
இயந்திர தெய்வம் (சிறுகதை) (1926) எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு எழுதிய சிறுகதை.
எழுத்து, வெளியீடு
ஆநந்த குணபோதினி இதழில் 1926இல் வெளியானது. எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு இவ்விதழில் ஆசிரியராக இருந்தபோது எழுதிய சிறுகதைகளில் ஒன்று.
கதைச்சுருக்கம்
பஞ்சாப் மாகாணத்தின் லாகூரைக் கதைக்களமாகச் கொண்ட கதை. மின்சார சக்தியால் இயங்கும் ரயில்களுக்கு மின்சார சக்தியளிக்கும் நிறுவனத்தின் புதிய மேனேஜரையும் அவரின் வேலையாளான ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ’காண்டா’ பற்றிய சித்தரிப்புமாக கதை ஆரம்பிக்கிறது. எப்போதும் அடியும் திட்டும் வாங்கும் காண்டா இயந்திரத்தை தெய்வமாக வணங்க ஆரம்பிக்கிறான். அதற்கு இடையூறாக இருந்த மேனேஜர் ஜேம்ஸை அதற்கே பலி கொடுக்கிறான். இரண்டாவதாக வந்த மேனேஜரையும் அவ்வாறாக பலி கொடுக்க முற்பட்டு தோற்றுப் போகிறான். அவனுக்கு ஜேம்ஸே பேயாக வந்து பலி கொடுக்கும் மூட நம்பிக்கையை அகற்ற பாடம் கற்றுக் கொடுக்கிறான். “பேய்கள் சில சமயம் நன்மையும் செய்யுமல்லவா” என்பது பகடியாகச் சொல்லப்பட்டுள்ளது. பாடங்களைக் கற்று காண்டன் நிபுணன் ஆகிவிடுகிறான். ஜேம்ஸ் தான் இறக்கவில்லையெனவும், அவனின் காண்டனின் மூட நம்பிக்கையை விரட்ட பேய் போல் நடித்ததாகவும் தன்னை வெளிப்படுத்தியதாக கதை முடிகிறது.
இலக்கிய இடம்
முற்பகுதி, பிற்பகுதி என இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அக்காலத்தில் புதியதாக வந்த மின்சார ரயிலைப் பற்றிய மூட நம்பிக்கைகளைக் களையும் சிறுகதையாக அமைந்துள்ளது.
உசாத்துணை
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.