under review

கே. பனையன்

From Tamil Wiki
Revision as of 10:06, 28 October 2024 by Logamadevi (talk | contribs)
கே. பனையன்

கே. பனையன் (பிறப்பு: 1942) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர். நாடகம், தெருக்கூத்து ஆகிய இரண்டும் ஆடுவார்.

வாழ்க்கைக் குறிப்பு

கே. பனையன் காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டியிலுள்ள முட்டவாக்கத்தில் 1942-ல் பிறந்தார். நான்காம் வகுப்பு வரை படித்தார். தெருக்கூத்து இல்லாத நேரத்தில் விவசாயம் பார்ப்பார்.

கலை வாழ்க்கை

கே. பனையன் முதல் தலைமுறை கூத்துக் கலைஞர். ஆரம்பத்தில் நாடகம் கற்றுக் கொண்டு ஆடினார். எம்.ஆர். முனுசாமி, எஸ். லோகநாதன் ஆகியோர் நாடகம் கற்றுக் கொடுத்தனர். அதன்பின் பி. முனுசாமி கூத்து கற்றுக் கொடுத்தார். முட்டவாக்கம் எம்.கே. கோபாலகிருஷ்ணன், முனுசாமி வழங்கிய 'வீடும் வயலும்' நிகழ்ச்சியில் இருபந்தியைந்து ஆண்டுகள் வானொலியில் கூத்தாடினார்.

ஸ்ரீ பவானி அம்மன் நாடக மன்றம், முட்டவாக்கம் பி. முனுசாமி கம்பெனி. விப்பேடு முனுசாமி கம்பெனி, வேம்பாக்கம் கோபால் கம்பெனி, சிறுமுகம் ஆறுமுகம் நாயக்கர் கம்பெனி ஆகிய குழுக்களில் தெருக்கூத்து ஆடினார். தர்மன், துரியோதனன், இரணியன், தேவேந்திரன் ஆகிய வேடங்களில் கூத்தாடினார். நாடகத்தில் பெண் வேடங்களில் ஆடினாலும் கூத்தில் பெண் வேடம் ஆடவில்லை. சென்னை, காஞ்சிபுரம், வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் கூத்து ஆடினார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்து
  • கர்ணமோட்சம்
  • கிருஷ்ணன் தூது
  • ரேணுகாசரித்திரம்
  • இரணிய விலாசம்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்

‎


✅Finalised Page