அரிசங்கர்
அரிசங்கர் (பிறப்பு: மே 4, 1987) எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதிவருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
அரிசங்கர் புதுச்சேரியில் சந்திரசேகரனுக்கும், உமாராணிக்கும் மே 4, 1987-ல் மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வி புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், புதுச்சேரி இளங்கோ அடிகள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். அண்ணாமலை பல்கலைக் கழகம், தொலைத்தூரக் கல்வியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார். தற்போது சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் கணினி வடிவமைப்பாளராக வேலை செய்கிறார். ஸ்ரீதேவியை பிப்ரவரி 26, 2014-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் வர்ணாஸ்ரீ.
இலக்கிய வாழ்க்கை
பதினெழாம் வயதில் “மாயப்படகு” என்ற சிறுவர் கதை தொடராக “புதுவை பாரதி” என்ற இதழில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சில கதைகள் புதுவை பாமரன் என்ற இதழில் வெளிவந்தது. 2018ல் “புதுச்சட்டை” என்ற கதை ‘மலைகள்’ இணையதளத்தில் வெளிவந்தது. ஆதர்ச எழுத்தாளர்களாக ராஜேந்திரசோழன், வைக்கம் முகமது பஷிர், சகத் ஹசன் மண்டோவைக் குறிப்பிடுகிறார்.
நூல்கள்
நாவல்
- பாரிஸ் (நாவல்) ஆகஸ்ட் 2019 – தமிழ்வெளி
- மாயப்படகு (சிறுவர் நாவல்) ஜனவரி 2020 - தமிழ்வெளி
- உண்மைகள் பொய்கள் கற்பனைகள் (நாவல்) ஜனவரி 2021 – டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
சிறுகதைகள்
- பதிலடி (சிறுகதைகள்) டிசம்பர் 2018 – யாவரும் பப்ளிஷர்ஸ்
- ஏமாளி (சிறுகதைகள்) ஆகஸ்ட் 2020 - தமிழ்வெளி
- உடல் (சிறுகதைகள்) ஜனவரி 2022 – எதிர் வெளியீடு
வெளி இணைப்புகள்
- இடைநிலை இலக்கியம் சாத்தியமா?
- கானல் கனவின் காதை: ரா.கிரிதரன்
- உண்மைகள் பொய்கள் கற்பனைகள்: விகடன்
- குற்றமற்ற மனதின் துயர்: சுரேஷ் பிரதீப்
- ஏமாளி: நூல்நோக்கு: அன்றாட அவஸ்தைகளின் கதைகள்