மதுசூதனன் சம்பத்
மதுசூதனன் சம்பத் (17 செப்டம்பர் 1974) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஒருங்கிணைப்பாளர். ஜெயமோகன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணைய தளங்களையும் ஒருங்கிணைக்கிறார்.
தனிவாழ்க்கை
மதுசூதனன் சென்னை குருநானக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம், ஐதராபாத் ICFAIல் முதுகலை டிப்ளமோவும், பின்னர் அமெரிக்காவில் ராச்செஸ்டர் பல்கலைகழகத்தில் வணிக மேலாண்மை, தகவல் அறிவியலில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வணிக ஆலோசனைத் துறையிலும் செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் பணிபுரிகிறார்
மனைவி, இரு மகன்களுடன் சென்னையில் வசிக்கிறார்.
ஒருங்கிணைப்பு பணிகள்
தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்தில் தொழில்நுட்பம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்த செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார். ஜெயமோகன் இணையதளத்தின் தொழில்நுட்ப உதவிக்குழுவில் பங்கெடுக்கிறார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நிகழ்வுகளை தொகுத்தளிக்கும் இணைய தளத்தையும் உருவாக்கியுள்ளார்.
நவீன தகவலறிவு, செயற்கை நுண்ணறிவு & மொழியியல் அணுகுமுறைகள், visualization அணுகுமுறைகள் மூலம் தமிழ் பயன்பாட்டு ஆய்வுகளில் பங்கெடுக்கிறார்.
இணைப்புகள்
- தமிழ் இலக்கியத்தை பற்றிய தகவல்களை visualization முறையில் அளிக்கும் ஒரு சோதனை முயற்சி- https://sevvazhai.in/
- வெண்முரசு பிரவுசர் - நாவலில் மூவாயிரம் பாத்திரங்களும் இடம்பெறும் இடங்கள் - https://sevvazhai.in/vmbrowser/venmurasu-browser.html
- ஜெயமோகன் இணையதளம் - https://www.jeyamohan.in/
- விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணையதளம் - https://vishnupuramvattam.in/