under review

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது

From Tamil Wiki
Revision as of 21:25, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added links to Disambiguation page)
XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ

To read the article in English: Vishnupuram - Kumaraguruparan Award. ‎

குமரகுருபரன் விருது 2017

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மறைந்த கவிஞர் குமரகுருபரன் பெயரால் வழங்கும் இளங்கவிஞர்களுக்கான இலக்கிய விருது.

தொடக்கம்

கவிஞர் குமரகுருபரன் ஜூன் 19,2016-ல் மறைந்தார். அவர் பெயரால் ஓர் இலக்கியவிருது வழங்கவேண்டும் என்று அவருடைய நண்பர் கவிதா சொர்ணவல்லி விரும்பியதன் பேரில் இவ்விருது ஏற்பாடு செய்யப்பட்டது. 2017 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட இளங்கவிஞர்களுக்கான விருது இது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை வழங்குகிறது.

விருது

இவ்விருது ரூபாய் ஐம்பதாயிரமும், சிற்பமும் அடங்கியது. ஆண்டுதோறும் குமரகுருபரனின் பிறந்தநாளான ஜூன் 10 -ஐ ஒட்டி சென்னையில் நிகழும் விழாவில் விருது அளிக்கப்படுகிறது. 2023 முதல் பரிசுத்தொகை ரூ. ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது.

விருதுபெற்றோர்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Apr-2023, 22:04:08 IST