தம்பி
From Tamil Wiki
தம்பி (1949) சிறுவர் இதழ். புதுக்கோட்டையில் இருந்து வெளியானது. (பார்க்க சிறுவர் இதழ்கள்)
வெளியீடு
புதுக்கோட்டையில் இருந்து மணி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட இதழ். 16 பக்கங்கள் ஆறு அணா. தம்பி இதழ் கதைப்போட்டிகள் நடத்தி பரிசளித்துள்ளது. வளரும் கதை என தொடர்கதை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் இவர் யார் என பிரெஞ்சு தேசத்து எஞ்சினியரை அறிமுகப்படுத்தியுள்ளது. செய்துபார் என குண்டூசியைத் தண்ணீரில் மிதக்க வைத்தல் பற்றிய குறிப்பை வெளியிட்டுள்ளது. பாரதி நாள் பற்றியும், பெரிய மருது சின்ன மருது பற்றியும் குறிப்புகள் உள்ளன
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
- தம்பீ - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:01 IST