ப. சரவணன்
From Tamil Wiki
முனைவர் ப. சரவணன் தமிழ் இலக்கிய-இலக்கண விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார்.