under review

பம்மல் விஜயரங்க முதலியார்

From Tamil Wiki
பம்மல் விஜயரங்க முதலியார்

பம்மல் விஜயரங்க முதலியார் (1830-1895) (மற்ற பெயர்கள்: பம்மல் விசயரங்க முதலியார், பம்மல் விசயரங்கனார்) பள்ளிகளுக்கு தேவையான தமிழ்ப் பாடநூல்களை அச்சிட்டு வெளியிட்டதில் முக்கியப் பங்காற்றினார்.

பிறப்பு மற்றும் கல்வி

விஜயரங்க முதலியார் சென்னையில் மார்ச் 1, 1830 அன்று பிறந்தார். பச்சையப்ப முதலியார் தொடக்கப்பள்ளியில் தொடங்கி சென்னை ராஜாஸ்தானி பள்ளியில் உயர் நிலைப்பள்ளி முடித்தார். பள்ளி இறுதியாண்டுத்தேர்வில் இரண்டாவதாக தேறியதற்காக அரசின் பொன் மோதிரம் ஒன்றைப்பரிசாக வென்றார்.

தனி வாழ்க்கை

மாணிக்க வேலம்மளைத் திருமணம் செய்து கொண்டார். அவரது மகன் தமிழ்நாடத்துறையின் முன்னோடியான பம்மல் சம்பந்த முதலியார்.

பணிகள்

இவர் 1851 ஆம் ஆண்டு இராபர்ட்சன் என்பவர் எழுதிய அமெரிக்க நாட்டு வரலாற்று நூலை தமிழில் மொழிபெயர்த்து 1852-ஆம் ஆண்டு வெளியிட்டார். இதற்காக பச்சையப்ப முதலியார் பரிசைப்பெற்றார்.

இவர் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக சிலகாலம் பணியாற்றி பின் பள்ளிகளின் துணைக்கண்காணிப்பாளராக மதுரை, திண்டுக்கல் முதலிய ஊர்களில் பணிபுரிந்தார். பின் 1890 வரை சென்னையில் பணி புரிந்து ஓய்வுபெற்றார்.

நூல்கள்

பள்ளிகளுக்கு தேவையான தமிழ் நூல்களை பதிப்பித்தார் மேலும் பல தமிழ் நூல்கள் வெளிவருவதில் துணைபுரிந்தார். மூன்றாம் வகுப்பு நூல் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டார்.

சமுதாயப்பணிகள்

இவர் சென்னைப்பல்கலைக்கழக உறுப்பினராக சில காலம் பணியாற்றினார். சென்னையில் விஜயநகர மன்னர் உருவாக்கிய நான்கு பெண்கள் பள்ளிகளுக்கு ஊதியமில்லாமல் பணி புரிந்தார். ஆசிரியப்பணி தேர்வுக்குழுவுக்கு சிலகாலம் ஆலோசகராக இருந்தார். தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பள்ளியில் சில காலம் பணிபுரிந்துள்ளார்.

சென்னை ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் திருவேட்டீச்சுரர் கோவில்களுக்கு அறங்காவலராக இருந்தார்.

இறப்பு

விஜயரங்க முதலியார் 1895-ஆம் ஆண்டு மறைந்தார்.


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.