சிறுகாப்பியம்
சிறுகாப்பியம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். சிறுகாப்பியம் பாட்டுடைத் தலைவனின் ஒருசில வாழ்க்கைக் கூறுகளை மட்டுமே கூறும்.
பெருங்காப்பியம் பாட்டுடைத் தலைவனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை தொடர்நிலைச் செய்யுள்களாகக் கொண்ட இலக்கிய நூல். ஐம்பெருங்காப்பியங்கள். ஐஞ்சிறு காப்பியங்கள் என இரு வகைப்படும்.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் பாடுவது பெருங்காப்பியம். இந்த நான்கில் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ மட்டும் பாடப்பட்ட நூல் சிறுகாப்பியம்.[1]
சிறுகாப்பியம் ஒரே வகையான பாட்டாலும், பலவகையான பாட்டாலும் அமையும். அவற்றில் உரைநடையும் ஊடே வரும். வேற்றுமொழிச் சொற்களும் வரும்.[2]
அடிக்குறிப்பு
இதர இணைப்புகள்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.