first review completed

டப்பாங் கூத்து

From Tamil Wiki
டப்பாங் கூத்து

”டப்பா” என்பது பாலியல் செய்கைகளை குறிக்கும் சொல். ஆபாசம், உறவு மீறல் போன்றவற்றை உரையாடல், பாடல், செய்முறை மூலமாக நிகழ்த்தும் கலை டப்பாங் கூத்து. இக்கலை கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும், நாட்டார் தெய்வ கோவில் விழாக்களில் தனி நிகழ்வாகவும் நிகழ்த்தப்படும்.

நடைபெறும் முறை

இக்கூத்து பெரும்பாலும் ஊரின் புறத்தே பெண்கள் அதிகம் புழங்காத இடத்தில் பின்னிரவு நேரத்தில் நடைபெறும். கரகாட்டத்தின் துணை கலைஞர்கள் கணவன், மனைவி இரண்டு பேரும், மாமியார், மருமகன் இரண்டு பேரும், வழிபோக்கனாக ஒருவனும் என ஐந்து பேர் பங்கு கொள்கின்றனர்.

பெரும்பாலும் ஆண்களே பெண் வேஷம் கட்டி மனைவியாகவும், மாமியாராகவும் நடிக்கின்றனர். சில இடங்களில் கரகாட்டத்தின் பெண் கலைஞர்களே இந்த வேடத்தில் நடிக்கின்றனர். மாமியார் வேடக் கலைஞர் பெரிய மார்பகத்தை உடையவராக இருப்பார்.

கணவன், மனைவியாக நடிப்பவர்களும், மாமியார், மருமகனாக நடிப்பவர்களும் உரையாடலில் தங்களின் உடலுறவு குறித்த பாலியல் செய்திகளை விவாதிப்பதும், பொருந்தா உடலுறவினால் வரும் துன்பங்களைப் பற்றி பேசுவதும், மாமியார், மருமகன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் இன்பம் பற்றி பேசுவதும் இதன் உள்ளடக்கம். கொச்சைச் சொற்கள், இரட்டை அர்த்த வழக்காறுகள் மூலம் உரையாடலாகவோ, பாட்டாகவோ இதை நிகழ்த்துவர்.

கூத்தில் நையாண்டி மேளக்காரரும் கலந்துக் கொள்கின்றனர். இக்கூத்தின் பின்னணிப் பாடல்களின் போதோ, கொச்சைச் சொற்கள் கலந்த உரையாடலின் போதோ பம்பையை இயக்குவர். இது நிகழ்ச்சிக்கு ஏற்ப மென்மையாகவோ, உச்சமாகவோ நிகழும்.

பார்வையாளர்கள்

இந்நிகழ்த்துக் கலையில் பெண்கள் பார்வையாளர்களாக வருவதில்லை. பெரும்பாலும் இள வயதுடைய ஆண்களே இந்த நிகழ்த்துக்கலையை ஏற்பாடு செய்கின்றனர்.

நிகழ்த்துபவர்கள்

கரகாட்டத்தின் துணை கலைஞர்கள் இதனை நிகழ்த்துகின்றனர்.

  • கணவன், மனைவி இரண்டு பேர்
  • மாமியார், மருமகன் இரண்டு பேர்
  • வழிபோக்கன் ஒருவன் என மொத்தம் ஐந்து பேர் நடிக்கின்றனர்.

பின்பாட்டிற்கு பம்பையை இயக்க நையாண்டி மேளக்காரர்கள் பங்கேற்கின்றனர்.

இசைக்கருவி

  • நையாண்டி மேளம்
  • பம்பை

அலங்காரம்

  • கணவனாகவும், மருமகனாகவும் நடிக்கும் கலைஞர்கள் சாதாரணமாக வேட்டி சட்டையோ, பல வண்ணமுடைய பைஜாமாவோ அணிந்திருப்பார்.
  • இக்கலையில் பெரும்பாலும் ஆண் கலைஞர்களே பெண் வேஷமும் இடுகின்றனர். சில இடங்களில் கரகாட்டத்தின் பெண் கலைஞர்கள் மனைவியாகவும், மாமியாராகவும் வேஷம் கட்டுகின்றனர்.
  • மாமியாராக வேஷம் கட்ட நடிப்பவர் பெரிய மார்பகங்களை உடையவராக இருப்பார்.

நடைபெறும் இடம்

  • இந்நிகழ்த்துக் கலை பெண்கள் இல்லாத இடமான ஊருக்கு ஒத்துக்குபுறத்தில் நடைபெறும்.
  • நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் இக்கலை நிகழும் போதும் பெண்கள் அதில் பங்கு கொள்வதில்லை.

உசாத்துணைகள்

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

காணொளி



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.