ஆ. சிவலிங்கனார்
ஆ. சிவலிங்கனார் (நவம்பர் 30, 1922 - நவம்பர் 03, 2014) தமிழறிஞர், புலவர், ஆய்வாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், எழுத்தாளர். உரை நூல்கள், திறனாய்வு நூல்கள், இலக்கண, இலக்கிய நூல்கள் எனப் பல நூல்களை எழுதினார். பதிப்பித்தார். ஆ. சிவலிங்கனார் எழுதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பிய உரைவள நூல்கள் தமிழின் குறிப்பிடத்தகுந்த ஆவண முயற்சியாக அறியப்படுகிறது. தொல்காப்பியச் செம்மல் உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
ஆ. சிவலிங்கனார், நவம்பர் 30, 1922 அன்று, கடலூருக்கு அருகிலுள்ள புது வண்டிப்பாளையம் கரையேற விட்டக் குப்பம் என்ற ஊரில், ஆறுமுக முதலியார் - பொன்னம்மாள் இணையருக்குப் பிறந்தார். உள்ளூர் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மேற்கல்வியை திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியாரடிகள் திருமடத்தில் படித்தார். 1940-ல், திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று தமிழில் வித்துவான் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
ஆ. சிவலிங்கனார், மணமானவர். மனைவி மங்களம்மாள். இவர்களுக்கு ஆறு மகன்கள்; இரண்டு மகள்கள்.
கல்விப் பணிகள்
ஆ. சிவலிங்கனார், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 1941-42-ல் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1942 முதல் 1972 வரை மயிலம் சிவஞான பாலயசுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பின் 1973-ல் சேலம் மோகனூர் சுப்பிரமணியம் தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.