under review

நெல்லை வருக்கக் கோவை

From Tamil Wiki
Revision as of 20:33, 14 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added display-text to hyperlinks)

நெல்லை வருக்கக் கோவை (பொ.யு. 16ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்றான கோவை நூல்களில் ஒன்று.

நூல் பற்றி

கோவை என்பது சிற்றிலக்கிய அகப்பொருள் நூல். இதன் ஆசிரியர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரை அம்பிகாபதி (பெருமாளையர்). இவரை இந்த நூலின் இறுதிப் பாடல் 'அம்பிகாபதி வீரையின் வேதியன்' என்று குறிப்பிடுகிறது. இந்நூலில் சிறப்புப் பாயிரம் உட்பட 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள்ளன. உயிரெழுத்து வரிசையில் பாடல்கள் அடுக்கப்பட்டுள்ளன. ஓர் எழுத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களும் இதில் உள்ளன.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கூடியிருந்த புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார். காப்புச் செய்யுளில் கண்டறிந்த பிழையால் அரகேற்றம் நிகழாமல் போனது. அவருடைய மகன் தன் தந்தை மறைவிற்குப்பிறகு அந்த காப்புச் செய்யுளுக்கு விளக்கம் கூறி அரங்கேற்றினார்.

பாடல் நடை

காப்புச் செய்யுள்

தேரோடும் வீதியெல்லாம் செங்கயலும் சங்கினமும்
நீரோ டுலாவிவரும் நெல்லையே

பாடல்

நூலாம் மருங்கின் உமை பாகர் நெல்லையில் நோற்றுப் பெற்ற
பாலா, பகலும் வந்தார் இல்லையே, கையில் பற்றிய வேல்
கோலால் நெடும் புனத்து இட்ட முள் வேலியைக் கோலி மெல்லக்
காலால் வழி தடவிக் கங்குல்வாய் வரக் கற்றவரே

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.