being created

ஏதுவணி

From Tamil Wiki

ஏதேனும் ஒரு பொருளின் திறத்தைக் கூறும்போது இதனால்தான் இது நிகழ்ந்தது என்ற காரணத்தைச் சிறப்பித்து எடுத்துச் சொல்வது ஏது அணி. இதன் வகைகள் காரக ஏது மற்றும் ஞாபக ஏது.

விளக்கம்

ஏது(ஹேது) என்றால் காரணம் என்று பொருள். ஏதேனும் ஓர் நிகழ்வையோ, ஒரு பொருளின் பண்பையோ கூறும்போது அதன் காரணத்தைப் பாடலின் வேறு பகுதி மூலம் சிறப்பித்துக் கூறுவது ஏதுவணி. காரணத்தோடு காரியத்தையும் சேர்த்துச் சொலவது ஏதுவணி.

தண்டியலங்காரம் இதன் இலக்கணத்தை

யாதென் திறத்தினும் இதனின் இது விளைந்ததென்
றேதுவிதந்(து) உரைப்ப(து) ஏது ; அதுதான்
காரக ஞாபகம் எனவிரு திறப்படும்.

என்று வகுக்கிறது.

வகைகள்

ஏதுவணி காரகவேது, ஞாபகவேது என இருவகைப்படும். காரகவேது அணி 8 வகைப்படும்.

முதல்வனும் பொருளும் கருமமும் கருவியும் ஏற்பது நீக்கமும் எனஇவை காரகம்." தண்டியலங்காரம் 57-

இதன்படி காரகவேது அணி 8 வகைப்படும்.

  • முதல்வன் ஏற்பது (நன்மை)
  • முதல்வன் நீக்கம் (அழித்தல்)
  • பொருள் ஏற்பது(நன்மை)
  • பொருள் நீக்கம்(அழித்தல்)
  • கருமம் ஏற்பது (நன்மை)
  • கருமம் நீக்கம் (அழித்தல்)
  • கருவி ஏற்பது (நன்மை)
  • கருவி நீக்கம் (அழித்தல்)

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டு-1

எல்லைநீர் வையகத்து, எண்இறந்த எவ்வுயிர்க்கும்
சொல்லரிய பேரின்பம் தோற்றியதால் ; -- முல்லைசேர்
தார்அலைத்து, வண்கொன்றைத் தார்அலைத்து, வண்டார்க்கப்
பூதலத்து வீழ்ந்த புயல்

கடல் சூழ்ந்த உலகிலுள்ள எண்ணற்ற எல்லா உயிர்களுக்கும் பேரின்பத்தை மழை விளைத்ததற்குக் காரணமாக புயல் முல்லக் கொடியின் மகரந்தத்தை அளைந்து, கொன்றைப்பூங்கொத்தை அசைத்து, வண்டுகள் ஆரவாரிக்க, நிலத்தில் மழையாக விழுந்ததைக் கூறுவதால் இது ஏதுவணி.

எடுத்துக்காட்டு-2

கணிகொள் பொழில்அருவி கைகலந்து,சந்தின்
பனிவிரவிப் பாற்கதிர்கள் தோய்ந்து, -- தனிஇருந்தோர்
சிந்தை யுடனே உயிர்உணக்கும், தென்மலையம்
தந்த தமிழ்மா ருதம்

தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய இனிய தென்றல் காற்று, கனிகளைக் கொண்ட பொழில்கள் சூழ்ந்த அருவி நீரில் கைகலந்து, சந்திரனின் குளிர்ந்த கதிர்களில் தோய்ந்து வீசுவதால் துணையைப் பிரிந்தவரின் உயிரை வாட்டுகிறது.

தென்றல் காற்று துணையைப் பிரிந்தவரின் மனதையும், உயிரையும் வாட்டுவதற்கு அது பொதிகை மலையில் தோன்றி, அருவி நீரில் கைகலந்து, சந்திரனின் ஒளியில் குளித்து வந்ததுதான் காரணம் எனக் கூறுவதால் இது ஏது





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.