குந்துநாதர்

From Tamil Wiki
குந்துநாதர்

குந்துநாதர் சமண சமயத்தின் 17-வது தீர்த்தங்கரர் ஆவார். கருமத் தளைகளிலிருந்து விடுபட்ட சித்த புருஷர்.

புராணம்

குந்துநாதர் இஷுவாகு குலமன்னர் சூரியதேவருக்கும், இராணி ஸ்ரீதேவிக்கும், அஸ்தினாபுரத்தில் மகனாகப் பிறந்தார். குந்து என்பதற்கு வட மொழியில் நவரத்தினங்களின் குவியல் எனப் பொருள். 100,000 ஆண்டுகள் வாழ்ந்த குந்துநாதர் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: தங்க நிறம்
  • லாஞ்சனம்: ஆடு
  • மரம்: திலக மரம்
  • உயரம்: 35 வில் (105 மீட்டர்)
  • கை: 140 கைகள்
  • முக்தியின் போது வயது: 100,000 ஆண்டுகள்
  • முதல் உணவு: அஸ்தினாபுரத்தின் தர்மமித்ரா அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 35 (ஸ்வயம்பு)
  • யட்சன்: கந்தர்வ தேவர்
  • யட்சினி: ஜெய தேவி

கோயில்கள்

  • திகம்பரர் சமணக் கோயில், அஸ்தினாபுரம், உத்தரப் பிரதேசம்
  • கனிஜிட்டி சமணக் கோயில், ஹம்பி
  • ஜெய்சல்மேர் கோட்டையில் உள்ள சமணக் கோயில்கள்
  • கரந்தை குந்துநாதர் ஜினாலயம், தமிழ்நாடு

உசாத்துணை