under review

தமிழ் எண்கள்

From Tamil Wiki
Revision as of 20:30, 14 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added display-text to hyperlinks)
தமிழ் எண்கள் (நன்றி: தமிழ் உலகு)

தமிழ் எண்கள் தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் எண்களைக் குறிக்கும்.

குறிப்பு

தமிழ் எண்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை ஒத்துக் காணப்படும். கல்வெட்டுக்கள், செப்பேடுகளில் காணப்படும் கிரந்த எழுத்து முறையை ஒத்தது. தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டுள்ளது. ஆனால் கிரந்த எண்களைப் போல தமிழில் சுழியம் கிடையாது.

வரலாறு

தொல்காப்பியர் எண் குறியீடுகள் பற்றிக் குறிப்பிடவில்லை. மதுரைக் கணக்காயனார், மதுரை வேளாசான், முக்கால் ஆசான் நல்வெள்ளையார், மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார், மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார், மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார், மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார், மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் ஆகியோர் எண் கணக்கு கற்பித்த சங்ககாலப் புலவர்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டு ஒட்டக்கூத்தன், புகழேந்தி ஆகிய புலவர்கள் காலத்திலும் தமிழ் எண்கள் வழக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் தமிழ் எண்களைப் பயன்படுத்தினர். இருபத்தியோராம் நூற்றாண்டில் வழக்கில் குறைந்துள்ளது.

தமிழ் எண்கள்

  • ௧ = 1
  • ௨ = 2
  • ௩ = 3
  • ௪ = 4
  • ௫ = 5
  • ௬ = 6
  • ௭ = 7
  • ௮ = 8
  • ௯ = 9
  • ௰ = 10
  • ௱ = 100
  • ௲ = 1000
  • ௰௲ = 10,000
  • ௱௲ = 100,000
  • ௰௱௲ = 1,000,000
  • ௱௱௲ = 10,000,000
  • ௰௱௱௲ = 100,000,000
  • ௱௱௱௲ = 1,000,000,000
  • ௲௱௱௲ = 10,000,000,000
  • ௰௲௱௱௲ = 100,000,000,000
  • ௱௲௱௱௲ = 1,000,000,000,000
  • ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.