being created

மு. முத்துவேலு

From Tamil Wiki
Revision as of 23:27, 6 July 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
Prof. Dr. Mu. Muthuvelu

மு. முத்துவேலு (முனைவர் மு. முத்துவேலு; பேராசிரியர் மு. முத்துவேலு) (பிறப்பு: மார்ச் 10, 1961) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளராகப் பணிபுரிந்தார். சட்டத்தமிழ் குறித்து விரிவாகப் பல ஆய்வுகளை மேற்கொண்டார். சட்டத்தமிழ் குறித்துப் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். திருக்குறளைப் பரப்பும் வகையில் பல பணிகளை முன்னெடுத்தார். திருக்குறள் மாமணி, திருக்குறள் ஞாயிறு உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மு. முத்துவேலு, மார்ச் 10, 1961 அன்று, மதுரை மாவட்டத்தில் உள்ள சிலைமலைப்பட்டி கிராமத்தில் முனியப்பன் - முத்தரசியம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக்கல்வியை உள்ளூரில் படித்தார். சென்னை லயோலா கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டமும், முதல் மாணவர் தேர்ச்சிக்கான தங்கப்பதக்கமும் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 'சட்டத்தமிழ்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சட்டக்கல்லூரியில் பயின்று பி.எல். பட்டம் பெற்றார். இதழியல் மற்றும் ஆட்சித்தமிழ் ஆகியன பயின்று பட்டயம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மு. முத்துவேலு, தமிழக அரசின் சட்ட ஆட்சி மொழி ஆணையத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில், மொழிபெயர்ப்பு அலுவலராகப் பணியாற்றினார். திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை அறிய இயலவில்லை.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.