under review

கிருஷ்ணாழ்வார்

From Tamil Wiki
Revision as of 10:20, 7 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/Updated by Je)
கிருஷ்ணாழ்வார்

கிருஷ்ணாழ்வார் (1895 -1967 ) எம். வி. கிருஷ்ணாழ்வார் .இலங்கையின் இடைநாடகக் கலைஞர். பாடகர், கூத்துக்கலைஞர்.

பிறப்பு கல்வி

கிருஷ்ணாழ்வாரின் இயற்பெயர் ஆழ்வார் பிள்ளை. யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டியைச் சேர்ந்த வீரகத்தி-இலக்குமி இணையருக்கு 1895ல் பிறந்தார். இவர் கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்புவரை வரை கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

கிருஷ்ணாழ்வார் லட்சுமி அம்மையாரை மணந்தார். ஸ்ரீதேவி என ஒரு மகள். கிருஷ்ணாழ்வாரின் பேரன் யோகேஸ்வரன், பெயர்த்தி யோகேஸ்வரி புவனேஸ்வரி ஆகியோர் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் வாழ்கிறார்கள்.

கலைவாழ்க்கை

கிருஷ்ணாழ்வார் தனது பதினாறாவது உடுப்பிட்டி ஆறுமுகம் அண்ணாவியாரின் நாடகக்குழுவில் சுபத்திரா கல்யாணம் நாடகத்தில் சுபத்திரை வேடம் ஏற்று நடித்தமையால் சுபத்திரை ஆழ்வார் என புகழ்பெற்றார். அரிச்சந்திரன் நாடகத்தில் சந்திரமதியாகவும் ஞானசவுந்தரியாகவும் ராஜபாட் வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர். இவர் ஆசுகவியாகப் பாடல்களை எழுதினார். புராண நாடகங்களில் கிருஷ்ணராக நடித்தமையால் "கிருஷ்ணாழ்வார்" எனவும் அழைக்கப்பட்டார். நினைத்ததும் பாடல் புனையும் திறமையால் ஆசுகவி என அழைக்கப்பட்டார். மிக இளம்வயதிலேயே வி.வி.வைரமுத்துவை அடையாளம் கண்டவர் என குறிப்பிடப்படுகிறது

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.