ஹுஸீனா
ஹுஸீனா (ஹுஸீனா ஹுஸைன்) (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், இதழியலாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஹுஸீனா இலங்கை காலி கிந்தோட்டையில் ஹுஸைன், ஜெனீஹா இணையருக்குப் பிறந்தார். காலி கிந்தோட்டை சாஹிரா தேசிய பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றார். பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்க தலைவியாகவும் சில காலம் செயற்பட்டார். பத்திரிகைத்துறை மற்றும் ஆங்கில மொழியில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.
இதழியல்
ஹுஸ்னா 2009 முதல் தினக்குரல் பத்திரிகையில் பணியாற்றினார். தினக்குரல் நாளிதழில் திங்கட்கிழமை தோறும் வெளிவந்த 'நலம் தானா?' என்ற சிறப்பு மருத்துவ இதழுக்கு பொறுப்பாசிரியராகவும் தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
தினக்குரல் நாளிதழிழலும் தினக்குரல் வார இதழிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார்.
விருதுகள்
- சிறந்த சமூக அபிவிருத்தி செய்தியாளருக்கான சுப்பிரமணியம் செட்டியார் விருது - 2000 இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம்.
- சிறந்த மருத்துவ கட்டுரைக்கான விருது - 2011 - இலங்கை மருத்துவ சங்கம்.
- சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருது - 2011 - இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து.
- சிறந்த மருத்துவ கட்டுரைக்கான விருது - 2012 - இலங்கை மருத்துவ சங்கம்.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.