under review

திருநூற்றந்தாதி

From Tamil Wiki
Revision as of 09:15, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
தமிழ் இணைய கல்விக்கழகம்

திருநூற்றந்தாதி (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) ஒரு சமண சமயத் தமிழ் நூல். மயிலாப்பூரில் கோவில் கொண்டிருந்த 22-ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதர் மீது பாடப்படது. அவிரோதி நாதரால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

திருநூற்றந்தாதியை இயற்றியவர் அவிரோதி நாதர். இவரை அவிரோதி ஆழ்வார் என்றும் அழைப்பர். சமணத் துறவிகள் ஊழ்கத்தில் ஆழ்ந்திருப்பதால் ஆழ்வார் என்ற சொல் அவர்களையும் குறிக்கும் எனக் கருதப்படுகிறது [1]. வைணவ சமயத்திலிருந்து மாறி, சமணக்கோட்பாட்டைப் பின்பற்றிய சமணர். 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நூல் அமைப்பு

சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக்காலத்தில் நேமிநாதர் கோவில்கொண்ட சமணக்கோவிலில் ஒன்று இருந்தது.அவிரோதி நாதர் இந்தக் கோவிலில் எழுந்தருளியிருந்த நேமிநாதரைப் போற்றிப் பாடிய நூல் திருநூற்றந்தாதி. இச்செய்தி திருநூற்றந்தாதியின் முதல் செய்யுளின் மூலம் புலனாகிறது.

மறமே முனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்
கறமே பொழியு மருட்கொண்டலே யதரஞ் சிறந்த
நிறமே கரியவொண் மாணிக்கமே நெடுநா லொளித்துப்
புறமே திரிந்த பிழையடி யேனைப் பொறுத்தருளே.

அருகக்கடவுள் மயிலாப்பூரில் கோவில்கொண்டிருந்தார் என்பதைத் திருக்கலம்பகம் எனும் நூலிலிருந்தும் அறியலாம்.

மயிலாபுரி நின்றவர் அரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவர் அலர்பூவி னடந்தவர்

தீர்த்தங்கரர்கள் சமவசரணத்தில் (ஆலயத்தில்) எழுந்தருளும்போது தோன்றும் எண்வகை சிறப்புகளில் ஒன்றான திவ்யதொனியைப் ('திருவாய் மொழி அல்லது 'திருமொழி') பற்றிக் கூறும் பாடல்

கதமொழி தீர்முன் கறுவுக டேய்மின் கருணைநெஞ்சோ
டிதமொழி கூறுமி னின்னுயி ரோம்புமி னெப்போழுதுஞ்
சுதமொழி கேண்மின் சுகமிக வேண்டிற் றுறவர்சொன்ன
வதமொழி யேன்மி னிவைசிந னார்திரு வாய்மொழியே”

ஆன்மாவிலிருந்து வேறான (முற்றிலும் புறம்பான) ஒரு கடவுளை சமண சமயம் ஏற்பதில்லை. விடுதலை அடைந்த எல்லா ஆன்மாக்களும் கடவுள் தன்மையை அடைந்ததாகக் கருதப்படும். பற்றினைப் போக்கி, வினைகளைக் களைந்து, பிறப்பினை நீக்கிய ஆன்மாவே சமணர் வணங்கும் தெய்வம். உள்ளத்தில் அவர் நிறைந்திருக்க வேண்டுகிறார் நூலாசிரியர்.

Included: English translation of Thirunutranthathi

பிற மதக் கண்டனமும் இதில் இடம்பெறுகிறது. பக்தி இயக்கக் காலத்திலும் அதன் பின்னரும் ஒவ்வொரு சமயமும், தத்தம் இறைவனை வழிபட்டார் யாராயினும் அவர் போற்றப்படத்தக்கார் என்றும், உயர் குலத்தவராயினும் தம் இறைவனைப் பணியாதார் இழிந்தவர் என்றும் கருதும் போக்கும் நிலவியது. அந்தப் போக்கினை இங்கும் காண்கிறோம்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page