under review

அந்துவன் கூட்டம்

From Tamil Wiki
Revision as of 20:08, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

அந்துவன் கூட்டம்: கொங்கு வேளாளக் கவுண்டர்களில் ஒரு கூட்டம். குலக்குழுவின் பெயர். கொங்கு வேளாளர் குலங்களில் இதுவே பழமையானது எனப்படுகிறது. அந்துவன் என்னும் பெயர் சங்ககாலம் முதல் இருந்து வருகிறது.

(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

பெயர்

கொங்கு குலத்தில் அந்துவன் கூட்டமே தொன்மையானது. அந்துவன் சேரல் இரும்பொறை என்ற சேரஅரசன் பற்றிய குறிப்புசங்கப்பாடலில் உள்ளது. நல்லந்துவனார் என்னும் புலவர் பெயரும் உள்ளது

வரலாறு

அந்துவன் குலத்தினர் கரூர்வட்டத்து நாகம்பள்ளியை முதற்காணி இடமாகக் கொண்டவர்கள். இவர்களுக்குச் செல்லாண்டியம்மன் குலதெய்வம். காங்கேயம், கீரனூர், பவானி, அவிநாசி , கோவை வட்டங்களில் மிகுதியாக உள்ளனர். நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர். மோடமங்கலம், பாலமேடு, தூரம் பாழ, கோழையூர், அந்தியூர், கோவில்பாளையம், நாமக்கல் ஆகியன இவர்களின் காணி இடங்களாகச் சொல்லப்படுகின்றன.

உசாத்துணை

https://kongubloods.blogspot.com/2018/02/60.html


✅Finalised Page