under review

எஸ். மல்லிகா

From Tamil Wiki
Revision as of 07:59, 3 June 2024 by Tamizhkalai (talk | contribs)

எஸ். மல்லிகா (மல்லிகாதேவி செல்வரத்தினம்) (பிறப்பு:1983) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

மல்லிகாதேவி செல்வரத்தினம் யாழ்ப்பாணம் அராலியில் 1983-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையிலும் வட்டு மத்திய கல்லூரியில் இடைநிலை கல்வியையும், உயர்கல்வியையும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் தமிழ்த்துறையில் சிறப்புக்கலைப் பட்டம் பெற்றார். வலி மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தில் சமுதாயஞ்சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றினார்.

ஊடகவியல்

எஸ்.மல்லிகா உயர்தரம் கற்கும் போதே தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார். 2009-ம் ஆண்டு தொடக்கம் 2016-ம் ஆண்டு வரை தினக்குரல் பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றினார். சுயாதீன ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

எஸ்.மல்லிகா என்ற பெயரில் சிறுகதை, கட்டுரை, நாவல் ஆகியவற்றை எழுதி வரும் இவர் 'அராலியூர் நிலா' என்ற புனை பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார்.

உசாத்துணை


✅Finalised Page