under review

நீலாய் இம்பியான் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 11:15, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Negeri.jpg

நீலாய் இம்பியான் தமிழ்ப்பள்ளி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நீலாய் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளியாகும். இது ஏறத்தாழ 100 ஆண்டுகளாக இயங்கி வரும் தொன்மை வாய்ந்த தமிழ்ப்பள்ளி. இதன் பதிவு எண் NBD4073. இது அரசாங்கத்தின் பகுதி உதவிபெற்ற குறைவான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளி.

வரலாறு

இப்பள்ளி பத்தாங் பெனார் தோட்ட தேசிய வகை தமிழ்ப்பள்ளி என்றே பல ஆண்டுகளாகக் குறிப்பிடப்பட்டது. இப்பள்ளி தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் பயிலுவதற்காக 1901-ல் தோற்றுவிக்கப்பட்டது 1940-ம் ஆண்டு வரையிலும் இப்பள்ளி அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், இரண்டே வகுப்பறைகளுடன் இயங்கி வந்தது. 1940-ம் ஆண்டில் ஏறத்தாழ 100 மாணவர்கள் இங்கு மரத்தடியிலும், திறந்த வெளியிலும் படித்து வந்தனர்.

உருமாற்றம்

பள்ளி சின்னம்

1950-ம் ஆண்டில் பத்தாங் பெனார் தோட்டம் Sime Darby நிறுவனத்தினரிடம் விற்கப்பட்டது. அதற்குப் பிறகு பள்ளியின் நிலை மாற்றங்கண்டது. தலைமையாசிரியர்களின் முயற்சியால் பள்ளியின் கட்டிடங்கள், சிற்றுண்டிச்சாலை, சாலை அமைப்பு, திடல், கருவூலமையம், மேடை, கார் நிறுத்துமிடம் போன்றவை உருவாக்கப்பட்டன.

இடமாற்றம்

2015-ல் வீடமைப்புப்பகுதிக்கு இடம் மாற்றப்பட்ட இந்தப்பள்ளி, நீலாய் இம்பியான் தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டு, 2 ஏக்கர் நிலத்தில் புதிய பள்ளிக்கட்டடத்தைப் பெற்றது.

தலைமை ஆசிரியர் பட்டியல்
திரு. எஸ். குப்புசாமி 1957 - 1983
திரு. பி. முனியாண்டி 1984 - 1987
திரு ரொஸ்லான் 1987 - 1994
திரு. முத்தையப்பன் 1995 - 2000
திரு. ரவி பெருமாள் 2001 - 2002
திருமதி கிருஷ்ணம்மாள் 2003 - 2006
திருமதி ஜெயசந்திரா 2007

உசாத்துணை

  • நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ்ப்பள்ளி, மை நாடி அறவாரியம்


✅Finalised Page