under review

சின்ன ஆலிம் அப்பா இப்ரகீம் லெப்பை

From Tamil Wiki
Revision as of 14:41, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

சின்ன ஆலிம் அப்பா இப்ரகீம் லெப்பை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்ன ஆலிம் அப்பா இலங்கை மட்டக்களப்பு, மருதமுனையைச் சேர்ந்த இப்ரகீம் லெப்பை, சூறைப்பாத்தும்மா இணையருக்கு பிறந்தார். தமிழிலும், அரபுமொழியிலும் புலமையுடையவர். இந்தியாவுக்குச் சென்று மதக்கல்வி பயின்று திரும்பினார். ஆலிம் என்ற முன்னொட்டு ’மதப்பேரறிஞர்’ என்பதைக் குறிக்கிறது.

இலக்கிய வாழ்க்கை

சின்ன ஆலிம் அப்பா ’ஞானரை வென்றான்’ என்னும் நூலை எழுதினார். இந்நூல் மருதமுனை ஆசிரியர் சங்கத்தினரால் அச்சேற்றி வெளியிடப்பட்டது. மேலும் ஆண்டவனை மழை பெய்விக்கும்படி வேண்டுதல் செய்து இவர் பாடிய பாடல்கள் 'மழைக் காவியம்' என்னும் பெயருடன் தொகுக்கப்பட்டன.

நூல் பட்டியல்

  • ஞானரை வென்றான்
  • மழைக் காவியம்

உசாத்துணை


✅Finalised Page