under review

இரத்தினேசுவர ஐயர் (இலந்தைவான்)

From Tamil Wiki
Revision as of 03:04, 30 August 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)

இரத்தினேசுவர ஐயர் (இலந்தைவான்) (பதினெட்டாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இரத்தினேசுவர ஐயர் இலங்கை மன்னர்ப் பகுதியில் இலந்தைவான் என்னும் ஊரில் பிறந்தார். வடமொழியிலும் தென் மொழியிலும் புலமையுடையவர். ஐரோப்பாவில் கல்வி பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

இரத்தினேசுவர ஐயர் இலந்தைவான் கீத்தாம்பிள்ளைப் புலவர்மீது சாற்றுக் கவி பாடினார். இவர் மொழிபெயர்த்து இயற்றிய நூல்களுள் "சத்தியவேத தர்ப்பணம்" குறிப்பிடத்தகுந்தது. இது நான்கு காண்டங்களாக வெளியிடப்பட்ட நூல். கீர்த்தனங்கள் பல பாடினார். "மருதமடுத் திருப்பதிமாலை" என்னும் பெயருடன் அந்தாதி வகையில் அமைந்த சதகமொன்றையும் இயற்றினார்.

மறைவு

இரத்தினேசுவர ஐயர் பொ.யு. 1800-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • மருதமடுத் திருப்பதிமாலை
  • சத்தியவேத தர்ப்பணம்

உசாத்துணை


✅Finalised Page