under review

சுப்பா ஞானியார்

From Tamil Wiki
Revision as of 00:33, 10 February 2024 by Boobathi (talk | contribs)
சுப்பா ஞானியார் சமாதி
சுப்பா ஞானியார் சமாதி ஆலயம்

சுப்பா ஞானியார் இந்து யோகி. அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் ஆலயத்தின் அருகே இவருடைய சமாதியிடம் ஆலயமாக அமைந்துள்ளது.

தனிவாழ்க்கை

சுப்பா ஞானியாரின் இயற்பெயர் சுப்பையா. இவர் அருப்புக்கோட்டையில் ஆரிய வைசிய செட்டியார் குலத்தில் செல்வந்தராகப் பிறந்து எண்ணெய் வணிகம் செய்தபின் மெய்ஞானம் தேடி அலைந்து அருப்புக்கோட்டை சொக்கநாதர் ஆலயத்திற்கு வந்து அதன் அருகே உள்ள சோலையிலேயே தங்கிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. மக்களின் நோய்களைத் தீர்த்தமையாலும், அருளுரைகள் சொன்னமையாலும் இவர் ஞானியாக வழிபடப்பட்டார். இவர் மறைந்தபின் இங்கே இவருடைய சமாதி ஓர் ஆலயமாகக் கட்டப்பட்டது.

சமாதி

அருப்புக்கோட்டை பாலையம்பட்டி சொக்கநாதர் ஆலயம் அருகே இவர் சமாதி அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் வழிபாடு நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page