ஜெராம் பாடாங் தோட்டத்தமிழ்ப்பள்ளி
ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பகாவ் வட்டாரத்தில் உள்ளது. இப்பள்ளி 1936-ல் தோற்றுவிக்கப்பட்டது. அரசாங்க பகுதி உதவி பெறும் இப்பள்ளியின் பதிவெண் NBD 6009 .
வரலாறு
ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1936-ல் ஜெராம் பாடாங், கெப்பிஸ் என்னுமிடத்தில் துவங்கப்பட்டது. தொடக்கத்தில் 47 மாணவர்கள் பயின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் ஒரிசா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
பள்ளிக் கட்டிடம்
ஆரம்பத்தில் ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒரு கட்டிட வரிசையில் அமைந்திருந்தது.1947 -ல் ஜெராம் பாடாங் தோட்ட நிர்வாகி திரு. ஜீப் உதவியால் பத்து பெர்சாவா தோட்டத்தில் மீண்டும் கட்டப்பட்டது.
புதிய கட்டிடம்
1966-ல் அப்போதைய ம.இ.காவின் தேசியத் தலைவர் வீ. தீ. சம்பந்தன் உதவி மானியத்தைக் கொண்டு ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இக்காலகட்டத்தில் ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 123 மாணவர்கள் இருந்தனர். 1982-ல் ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மேலுமொரு கட்டிடம் அரசாங்க உதவியில் கட்டப்பட்டது. 2010-ல் சிற்றுண்டிச்சாலையும் மேலும் இரு அறைகளும் கட்டப்பட்டன. தற்போது ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்று கட்டிடங்களும் ஆறு வகுப்புகளும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
தலைமையாசிரியர் பட்டியல்
எண் | பெயர் | ஆண்டு |
1. | எஸ். வீரன் | 1936 – 1948 |
2. | எஸ். இராமசாமி | 1948 – 1953 |
3. | எம். கண்ணன் | 1953 – 1978 |
4. | பி. மயில்வாகனம் | 1978 – 1993 |
5. | சுப்பிரமணியம் | 1993 – 1995 |
6. | ம. சந்திரன் | 1995 – 2002 |
7. | அப்புனி | 2002 – 2004 |
8. | ஜெயமணி | 2004 – 2005 |
9. | கோ. அரிமுத்து | 2005 – 2011 |
10. | பெ. பாரதிதாசன் | 2011 – தற்போதுவரை |
உசாத்துணை
மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக் கல்வி அமைச்சு, 2016
✅Finalised Page