under review

அ. ரா. மாதவராய முதலியார்

From Tamil Wiki
Revision as of 21:35, 8 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Jeyamohan)

அ. மாதவராய முதலியார் (இறப்பு-1927) தமிழில் குறுகிய காலகட்டத்தில் அதிகமான நாவல்களை எழுதியவர் என குறிப்பிடப்படுகிறார்.

வாழ்க்கை

அ. மாதவராய முதலியார் குணபோதினி (பெங்களூர் குணபோதினி) என்னும் இதழை நடத்தினார். இவருடைய ஒரு நாவல் இவர் மறைவுக்குப் பின்னர் வெளிவந்தது. அதில் மணி திருநாவுக்கரசு முதலியார் எழுதிய முன்னுரையில் அ. மாதவராய முதலியார் இருபத்தைந்து வயதுக்குள் 26 நாவல்களை எழுதினார் என்றும் 1927-க்குள் மறைந்தார் என்றும் சொல்கிறார்.

நூல்கள்

  • காதலற்ற கல்யாணம் அல்லது பெண் வீட்டாரைக் கொள்ளையடித்தல்
  • கனகரத்தினம்
  • லோகநாயகி
  • வேதவல்லி
  • மதுசூதனன்
  • ஜகதலஜகச்சோதி
  • மாணிக்கவல்லி

உசாத்துணை


✅Finalised Page