வைகானஸம்

From Tamil Wiki
Revision as of 21:29, 3 June 2024 by Jeyamohan (talk | contribs)

வைகானஸம் (வைகானசம்) வைணவ ஆகமம். வைணவ வழிபாட்டு மரபு பின்னாளில் வைணவ ஆகமத்தொகுப்பாக மாறியது. இது விஷ்ணுவின் உருவங்கள் (வியூக நிலை) மட்டுமே முதன்மையாகக் கொள்ளத்தக்கவை என நம்பும் தூய உருவவழிபாட்டு மரபாகும். தலைமுறையாகத் தொடரும் ஆசிரியர் மரபைக் கொண்டது. அம்மரபு பின்னாளில் சாதியாக ஆகியது.

ஆகமம்

ஆகமம் என்பது மதங்களின் வழிபாட்டு முறைகளின் தொகுப்பாக அமைந்த நூல். வைணவ ஆகமங்களில் முதன்மையானவை பாஞ்சராத்ரம், வைகானஸம் ஆகியவை.

நிறுவனர்

வைகானஸ மரபை தொடங்கியவர் விகனஸ முனிவர் என்று தொன்மம் உள்ளது. விஷ்ணுவே நாராயணர் வடிவில் வந்து இந்த வழிபாட்டு முறையை விகனஸ முனிவருக்கு வழங்கினார் என நம்பப்படுகிறது.