standardised

வே.நி.சூர்யா

From Tamil Wiki
Revision as of 18:51, 5 April 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
வே.நி.சூர்யா

வே.நி. சூர்யா (அக்டோபர் 03, 1996) தமிழில் நவீனக் கவிதைகள் எழுதிவரும் கவிஞர். கவிதை மொழியாக்கம், கவிதை விமர்சனம் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.ந் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்

பிறப்பு, கல்வி

வே.நி.சூர்யா நாகர்கோவில் அருகே பறக்கை என்னும் ஊரில் அக்டோபர் 03, 1996-ல் ஆர்.வேலாயுதம், எம்.நிர்மலா இணையருக்குப் பிறந்தார். தொடக்கப்பள்ளி பறக்கையில். ஆறாவது வகுப்பிலிருந்து பத்தாவது வரைக்கும் புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை. பதினோராவது வகுப்பிலிருந்து பன்னிரண்டு வரைக்கும் புனித யோவான் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை. இயந்திரவியல் பொறியியலில் இளங்கலைப் பட்டத்தை பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரியில் இருந்து பெற்றார்

இலக்கியவாழ்க்கை

வே.நி.சூர்யாவின் முதல் படைப்பு 2014-ல் எழுதிய பயணம் என்னும் சிறுகதை. ’பாலையின் நகர்வு’ என்ற கவிதை. 2016-ல் கல்குதிரை சிற்றிதழில் வெளிவந்தது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்:  நகுலன், அபி என்று குறிப்பிடுகிறார்.பெரும்பாலும், மறைந்து இருக்க ஆசைப்படுகிறவன். கவிதையை விட்டால் எனது அனுபவங்களைச் சொல்லவும் எனக்கு வேறு தீர்க்கமான உபாயங்கள் இருந்ததில்லை. மேலும், மிதப்பதைவிட அமிழ்வதே எனது மனநிலையாக இருக்கிறது. என்று தன் படைப்புக்கான மனநிலையை குறிப்பிடுகிறார்[1].

இலக்கிய இடம்

வே.நி.சூர்யா தமிழில் அகவயமான படிமங்களுடன் இருத்தலியல் தேடல்களை எழுதும் கவிஞர். ஐரோப்பியக் கவிதைகளை தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்துவருகிறார். அக்கவிதைகளின் படிமங்களுடனான உரையாடலாக அவருடைய கவிதையின் படிமங்கள் அமைகின்றன. ’தன்னைச் சிதறடிக்கும் கவிதைகள் என்று இவற்றை கூறலாம். தானற்று போவதையும் தான் எதில், எவ்வாறு சிதறி வெளிப்படுகிறோம் அல்லது விலக்கப்படுகிறோம் என்பதையே சூர்யாவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.அவரது கவிதை மொழி மிகவும் புதியது. ஐரோப்பியக் கவிதைகளில் காணப்படுவது போன்று எளிய தோற்றத்தில் அபூர்வமான கவித்துவ மொழிதலைக் கொண்டிருக்கின்றன’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்[2].

விருதுகள்

  • வே.பாபு நினைவு கவிதை விருது-2021

நூல்கள்

  • கரப்பானியம் (2019)- கவிதைத் தொகுதி
  • அந்தியில் திகழ்வது (2022) - கவிதைத் தொகுப்பு

உசாத்துணை

குறிப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.