ஏதுவணி
ஏதேனும் ஒரு பொருளின் திறத்தைக் கூறும்போது இதனால்தான் இது நிகழ்ந்தது என்ற காரணத்தைச் சிறப்பித்து எடுத்துச் சொல்வது ஏது அணி. இதன் வகைகள் காரக ஏது மற்றும் ஞாபக ஏது.
விளக்கம்
ஏதேனும் ஓர் நிகழ்வையோ, ஒரு பொருளின் பண்பையோ கூறும்போது அதன் காரணத்தை பாடலின் வேறு பகுதி மூலம் சிறப்பித்துக் கூறுவது ஏதுவணி.
தண்டியலங்காரம் இதன் இலக்கணத்தை
யாதென் திறத்தினும் இதனின் இது விளைந்ததென்
றேதுவிதந்(து) உரைப்ப(து) ஏது ; அதுதான்
காரக ஞாபகம் எனவிரு திறப்படும்.
என்று வகுக்கிறது.
எடுத்துக்காட்டுகள்
எடுத்துக்காட்டு-1
எல்லைநீர் வையகத்து, எண்இறந்த எவ்வுயிர்க்கும்
சொல்லரிய பேரின்பம் தோற்றியதால் ; -- முல்லைசேர்
தார்அலைத்து, வண்கொன்றைத் தார்அலைத்து, வண்டார்க்கப்
பூதலத்து வீழ்ந்த புயல்
கடல் சூழ்ந்த உலகிலுள்ள எண்ணற்ற எல்லா உயிர்களுக்கும் பேரின்பத்தை மழை விளைத்ததற்குக் காரணமாக புயல் முல்லக் கொடியின் மகரந்தத்தை அளைந்து, கொன்றைப்பூங்கொத்தை அசைத்து, வண்டுகள் ஆரவாரிக்க, நிலத்தில் மழையாக விழுந்ததைக் கூறுவதால் இது ஏதுவணி.
கணிகொள் பொழில்அருவி கைகலந்து,சந்தின்
பனிவிரவிப் பாற்கதிர்கள் தோய்ந்து, -- தனிஇருந்தோர்
சிந்தை யுடனே உயிர்உணக்கும், தென்மலையம்
தந்த தமிழ்மா ருதம்
தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய இனிய தென்றல் காற்று, கனிகளைக் கொண்ட பொழில்கள் சூழ்ந்த அருவி நீரைச்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.